தலிபான்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆயுத உதவி
வாஷிங்டன்:
பாகிஸ்தானில் இருந்து தலிபான்களுக்கு இன்னும் ஆயுதங்கள் வழங்கப்பட்டு வருவதாக இந்திய உளவுத்துறைகூறியுள்ளதை அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
பாகிஸ்தானின் குவெட்டாவிலிருந்து, எல்லைப் புறநகரமான சாமன் நகருக்கு ஆயுதங்கள், எரிபொருட்கள் மற்றும்பல பொருட்களும் கொண்டு செல்லப்பட்டு , அங்கிருந்து தலிபான்களின் முக்கிய நகரமான காண்டஹாருக்குஇரவோடு இரவாக டிரக்குகள் மூலம் ரகசியமாகக் கடத்தப்படுகின்றன என்று இந்தியா கூறியது.
இந்தச் செய்தியை வாஷிங்டன் போஸ்ட் நாளிதளும் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தியை அமெரிக்கஅதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பெயர் சொல்ல விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், பாகிஸ்தான் தனது நாட்டு எல்லையைஇரண்டு விதமாகக் கண்காணித்து வருகிறது. பகலில் ஒரு விதமாகவும், இரவில் ஒரு விதமாகவும் அந்நாட்டுஎல்லை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தலிபான்களுக்கு இரவு நேரங்களில் பாகிஸ்தான் ஆயுதங்களை அளித்து வருகிறது என்று இந்திய உளவுத்துறைவெளியிட்ட செய்தி உண்மையானதுதான். பாகிஸ்தான் இந்த விஷயத்தில் டபுள்கேம் ஆடுகிறது என்றார்.
ஆனால் அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் இதைக் கடுமையாக மறுத்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் அரசுக்குத் தெரிந்துதலிபான்களுக்கு ஆயுதங்கள் அளிக்கப்படவில்லை. யாராவது தனிநபரோ, அல்லது இயக்கமோ தலிபான்களுக்குஆயுத உதவிகள் அளித்திருக்கலாம் என்று கூறியுள்ளது.
ஆனால் சமீப காலமாக பாகிஸ்தானிய அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் அமெரிக்காவின் முயற்சிகளுக்குஎதிராகச் செயல்பட ஆரம்பித்துள்ளனர்.
மேலும் பாகிஸ்தான் இந்த விஷயத்தில் நாடகமாடி வருவதால் அமெரிக்க அதிபர் புஷ் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications