கலிபோர்னிய பாலங்களைத் தகர்க்க தீவிரவாதிகள் திட்டம்

Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்:

அமெரிக்காவின் கலிபோர்னியாவிலிருக்கும் பாலங்களை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளதால்,அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று கலிபோர்னியா கவர்னர் காரி டேவிஸ்கூறியுள்ளார்.

இது குறித்து அவர் நேற்று (வியாழக்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:

கலிபோர்னியாவிலுள்ள கோல்டன் கேட் பாலம் உள்ளிட்ட பல பாலங்களையும் தகர்க்க தீவிரவாதிகள்திட்டமிட்டிருப்பதாக எப்.பி.ஐ. உள்ளிட்ட பல உளவு நிறுவனங்களிடமிருந்தும் நம்பத் தகுந்த தகவல்கள்வந்துள்ளன.

சான்பிரான்சிஸ்கோவிலிருக்கும் கோல்டன் கேட் பாலம், லாஸ் ஏஞ்சல்ஸ் துறைமுக பகுதியிலிருக்கும் வின்சன்ட்தாமஸ் பிரிட்ஜ் அல்லது சான்டியாகோவிலிருக்கும் கொரானாடோ பிரிட்ஜ் ஆகியவற்றின் மீது தகர்க்கதீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த ஒரு வாரத்திற்குள் இந்த தாக்குதல்களை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இதையடுத்து இந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க கடலோர காவல் படையினரும்,கலிபோர்னியா ரோந்து பணியினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிரவாதிகள் எடுக்கும் எந்த நடவடிக்கையையும் எதிர்த்து முறியடிக்க தயாராக உள்ளோம் என்றார் டேவிஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+