சென்னையில் பெரும் தீ விபத்து தவிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் உள்ள ஒரு எண்ணெய் கிடங்கில் ஏற்படவிருந்த பெரிய தீவிபத்து தவிர்க்கப்பட்டது.
வடசென்னை கொருக்குப் பேட்டையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்குச் சொத்நதமான எண்ணெய் சேமிப்புக்கிடங்கு உள்ளது.
இந்தக் கிடங்கில் இணைக்கப்பட்டிருந்த ஆயில் பைப்பில் இருந்து தீப்பொறி கிளம்பியதைப் அந்தப் பகுதி மக்கள்பார்த்து விட்டனர். அந்த பைப் துருப்பிடித்திருந்ததால் அதிலிருந்து ஆயில் கசிந்து, எப்படியோ தீப்பற்றியுள்ளது.
உடனே இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்துகடுமையாகப் போராடித் தீயை அணைத்தனர்.
சரியான நேரத்தில் தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்ததால் பெரிய தீ விபத்துத் தவிர்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications