எங்கள் அணு மையங்கள் பத்திரமாக உள்ளன: பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் உள்ள அணு மையங்கள் பத்திரமாக உள்ளன என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்துல்சத்தார் கூறியுள்ளார்.
அல்-கொய்தா இயக்கத்தினர் பாகிஸ்தானில் உள்ள அணு மையங்களைக் கைப்பற்றி அங்குள்ளஅணுகுண்டுகளையும் கடத்திக் கொண்டு போகப் போவதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதைப் பாகிஸ்தான் கடுமையாக மறுத்துள்ளது. மேலும், பாகிஸ்தானில் உள்ள அணு சக்தி ஆராய்ச்சி மையங்கள்,அணு மின் நிலையங்கள், அணு ஆயுதக் கூடங்கள் மிகவும் பத்திரமாக உள்ளன என்று அப்துல் சத்தார் கூறியுள்ளார்.
அல்-கொய்தா அமைப்பினர் எங்களிடமிருந்து அணு குண்டுகளைக் கைப்பற்றப் போவதாக வந்த செய்திகள்முற்றிலும் கற்பனையானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அணு மையங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து எந்த ஒரு சிறிய பொருளைக்கூட யாரும் வெளியே கொண்டு செல்ல முடியாத அளவுக்குப் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளோம் என்றும்சத்தார் கூறினார்.
சில நாடுகள் தீவிரவாதிகளுக்கு அணு ஆயுதங்களைத் தந்து உதவி வரும் பயங்கரமான சூழ்நிலை நிலவி வருகிறதுஎன்றும் தங்களை எதிர்க்கும் நாடுகளின் அணு மையங்களை தாக்கும் செயல்களில் தீவிரவாதிகள் ஈடுபடலாம்என்றும் சர்வதேச அணு சக்தி கமிஷனின் டைரக்டர் ஜெனரல் முகம்மத் அல்பராடி எச்சரித்திருந்த சில மணிநேரத்திலேயே அப்துல் சத்தார் பதில் கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications