தீபாவளி முன் பணம் கேட்டு மேட்டூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மேட்டூர்:
அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் வழங்க வேண்டும் என்று கோரி தமிழக அரசு ஊழியர்கள் நேற்று(வியாழக்கிழமை) மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது பண்டிகையை கொண்டாடுவதற்காக தமிழக அரசு ஊழியர்களுக்குமுன் பணம் வழங்கப்படுவது வழக்கம். தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதம் முன்பே இந்த முன் பணம்வழங்கப்பட்டுவிடும்.
ஆனால் இந்த ஆண்டு நிதி நிலை நெருக்கடி காரணமாக முன் பணம் வழங்கப்படவில்லை. கடை நிலைஊழியர்களுக்கு மட்டும் முன் பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு வியாழக்கிழமை அறிவித்தது.
இந்நிலையில் மேட்டூரில் தமிழக அரசு ஊழியர் ஒன்றிய அமைப்பின் உறுப்பினர்கள் மேட்டூர் வட்டாட்சியர்அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு உடனடியாக பண்டிகை முன் பணம் வழங்க ஆவண செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷங்கள்எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்,
கடந்த ஜுலை மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்தது. அதற்குஇணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைபடி உயர்த்தி கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால் இன்றுவரை அரசு அகவிலைபடியை உயர்த்தவில்லை. இது குறித்து நாங்கள் கோரிக்கை விடுத்தும் எந்தவிதமான பலனும் இல்லை.
அரசு உடனே தீபாவளி பண்டிகைக்கான முன் பணம் வழங்க வேண்டும். அகவிலை படியையும் உயர்த்த வேண்டும்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications