மதுரை அருகே ஓடும் பஸ்சில் கொள்ளை: ஒருவர் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை-ராமநாதபுரம் ரிங் ரோடு அருகே பஸ்சில் பயணிகளிடம் கொள்ளையடித்த கொள்ளை கும்பலைச் சேர்ந்தஒருவரைப் பயணிகள் விரட்டிப் பிடித்தனர்.
மதுரையிலிருந்து ராமநாதபுரத்துக்கு அரசு பஸ் ஒன்று நேற்று (வியாழக்கிழமை) இரவு கிளம்பியது. பனையூரைகடந்து சென்று கொண்டிருந்த போது, அந்த பஸ்சை நிறுத்தி 7 வாலிபர்கள் அதில் ஏறினர்.
ராமநாதபுரம் ரிங் ரோடில் அந்த பஸ் சென்று கொண்டிருந்த போது, 7 பேரும் கத்தி, அரிவாள் போன்றஆயுதங்களை காட்டி மிரட்டி, பயணிகளிடமிருந்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிஓடினர்.
ஆனால் பயணிகளும் கொள்ளையர்களை துரத்திக் கொண்டு ஓடினர். இதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். மற்ற 6பேரும் தப்பி ஓடி விட்டனர்.
பிடிபட்ட கொள்ளையர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். தப்பி ஓடிய மற்ற 6 கொள்ளையர்களைப் போலீசார் தேடிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications