கரு ஆணா, பெண்ணா என்று ஸ்கேன் செய்தால் கடும் நடவடிக்கை
சென்னை:
கருவிலிருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று ஸ்கேன் செய்து தெரிவிப்பவர்கள் குறித்து தகவலோ,புகாரோ கொடுத்தால், ஸ்கேன் மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
விஞ்ஞானம் வேகமாக வளர்ந்துள்ளதால், கருவிலிருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை ஸ்கேன்கருவியை பயன்படுத்தி தெரிந்து கொள்வதில் பெரும்பாலோர் ஆர்வம் காட்டுகின்றனர்.
மேலும் பெண் குழந்தைை வேண்டாம் என்பவர்கள் கருச் சிதைவு செய்து கருவிலேயே அந்த சிசுவை கொலைசெய்துவிடும் மகாபாதக செயலும் நடந்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசின் அங்கீகாரம் பெறாமல் பல ஸ்கேன் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் ஸ்கேன்கருவியை பயன்படுத்தி கருவிலிருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று தெரிவிக்கிறார்கள். இதுசட்டப்படி குற்றமாகும்.
இந்த குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்த குற்ற செயல்களில் ஈடுபடுவோர் குறித்து சென்னையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள்இயக்குனர் அலுவலகங்களிலும், அனைத்து மாவட்டஙகளிலும் உள்ள சுகாதார நல பணிகள் துறையின் மாவட்டஇணை இயக்குனர் அலுவலகங்களிலும், அனைத்து தாலுகா மருத்துவ அலுவலரிடமும் தகவல் தெரிவிக்கலாம்என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications