புதுவை அரசுக்கு அதிமுக ஆதரவு
சென்னை:
பாண்டிச்சேரி காங்கிரஸ் அரசுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இதையடுத்து முதல்வர் ரங்கசாமிதலைமையிலான அமைச்சரவையில் அதிமுகவும் இடம் பெறும் என்று தெரிகிறது.
பாண்டிச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. இந்த அரசுக்கு ஆதரவு தருவதுகுறித்து அதிமுகவும், தமிழ் மாநில காங்கிரஸும் இதுவரை வாயே திறக்காமல் இருந்து வந்தன.
இந்நிலையில் கண்ணன் தலைமையிலான பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ் தன் தாய்க் கட்சியான காங்கிரசில்இணைந்தது. இதையடுத்து காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்தது.
இந்தச் சூழ்நிலையில் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு தருவதாக அதிமுக கூறியுள்ளது. இதற்கான கடிதத்தைஅக்கட்சியின் பாண்டிச்சேரி மாநில தலைவர் நடராஜன் ஆளுநர் ரஜினி ராயிடம் வியாழக்கிழமை மாலைகொடுத்தார். இதையடுத்து அமைச்சரவையில் அதிமுகவும் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது.
அதேசமயம், தமிழ் மாநில காங்கிரஸ் தனது முடிவு குறித்து இன்னும் எதுவும் அறிவிக்கவில்லை. இருப்பினும்காங்கிரஸ் அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தனது ஆதரவை வழங்கும் என்று காங்கிரஸ் தலைவர்கள்எதிர்பார்க்கிறார்கள்.
இதற்கிடையே, வல்சராஜ், சந்திரகாசு, லட்சுமி நாராயணன் ஆகிய 3 பேரும் முதல் கட்டமாக அமைச்சர்களாகபதவியேற்கவுள்ளனர். இவர்களது பெயர்கள் அடங்கிய பட்டியலை முதல்வர் ரங்கசாமி ஆளுநரிடம்வியாழக்கிழமை வழங்கினார்.
ஆளுநர் இந்த பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஒப்புதல்கிடைத்ததும் 3 பேரும் 5ம் தேதி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள் என்று தெரிகிறது.
மேலும் 2 அமைச்சர்களை நியமிக்க முதல்வர் ரங்கசாமியும், மாநில காங்கிரஸ் தலைவர் நாராயணசாமியும் முடிவுசெய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications