அமெரிக்கா மீதான தாக்குதலில் முக்கிய குற்றவாளியை பிடிக்க பாகிஸ்தான் தீவிரம்
இஸ்லமாபாத்:
அமெரிக்கா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக முக்கியமான குற்றவாளிகளை தேடும் பணியில்பாகிஸ்தான் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த தாக்குதலில் தொடர்புடைய, முக்கிய குற்றவாளி ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளதுதெரிய வந்துள்ளதால் இவரை தேடும் பணியில் பாகிஸ்தான் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.
அமெரிக்கா மீது தாக்குதல் நடந்த பின் பாஜி (வயது 26) என்பவர் பாகிஸ்தான் திரும்பி வந்துள்ளார். இவர்இஸ்தான்புல்லுக்கு செல்வதற்காக கராச்சி விமான நிலையத்திற்கு வந்துள்ளார். இவர் இன்னமும் கராச்சியில்தான்பதுங்கியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன் பாஜி தனது கூட்டாளிகள் 3 பேருடன்கராச்சி வந்துளளார். அவர்கள் அனைவரும் ஐரோப்பிய பாஸ்போர்ட்டுடன் பயணம் செய்துள்ளனர். ஆனால்அவர்கள் அனைவரும் அரபு நாட்டவர்கள்.
இவர்கள் கராச்சியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி, அங்கிருந்து ஹாம்பர்க்குக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினர். பிறகு அங்கிருந்து குவெட்டா நகருக்கு சென்று பின்னர் அங்கிருந்து ஆப்கானிஸ்தானிற்குள்ஊடுருவி தப்பியிருக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஜெர்மனியில் வசித்து வந்த பாஜி மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவர். இவர் குறித்து ஜெர்மன் அதிகாரிகள்கூறுகையில்,
பாஜிக்கு நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களுடன் நெருங்கிய தொடர்புஇருந்துள்ளது.
ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க்கில் ஒரு அபார்ட்மென்டை வாடகைக்கு எடுத்து 1998 முதல் பாஜி தங்கியிருந்தார்.முகமது அடா என்பவரும் இவருடன் தங்கியிருந்தார் என்று கூறினர்.
அமெரிக்க விமானங்களை கடத்தி தாக்குதல் நடத்தியவர் அடா என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜி கைது செய்யப்பட்டால் அது அமெரிக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒசாமா பின் லேடனின் அல்-கொய்தா அமைப்புக்கும் தொடர்புள்ளது என்பதற்கு வலுவான ஆதாரமாக அமையும்.
இந்நிலையில் சமீபத்தில் கராச்சி விமான நிலையத்திலிருந்து டொரான்டோ செல்லவிருந்த 4 பேரை பாகிஸ்தான்அதிகாரிகள் கைது செய்தனர்.
இவர்களில் 2 பேர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். ஒருவர் யெமான் நாட்டைச் சேர்ந்தவர். மற்றொருவர்எகிப்பது நாட்டைத் சேர்ந்தவர்.
இவர்கள் சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி வந்து கராச்சியில் தங்கியிருந்தனர்.இவர்கள் முஸ்லிம் தீவிரவாத அமைப்பான சிபா-இ-சாபா அமைப்பினருடன் தங்கியிருந்தனர் என்றும் பாகிஸ்தான்அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications