டிரைவர், கண்டக்டர்களுக்கு தீபாவளி போனஸ்: 6ம் தேதி பேச்சுவார்த்தை
சென்னை:
தமிழகப் போக்குவரத்துத்துறைத் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து நவம்பர் 6ம் தேதிசென்னையில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும், தமிழக அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
தமிழகப் போக்குவரத்துத் துறையில் 1,05,000 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.
இவர்களுக்குக் கடந்த ஆண்டு 8.33 சதவீதம் போனசாகவும், 11.66 சதவீதம் கருணைத் தொகையாகவும் மொத்தம்20 சதவீதம் வழங்கப்பட்டது.
இதன் மூலம் ஒவ்வொரு தொழிலாளியும் ரூ.6000 வரை போனசாகப் பெற்றனர்.
இந்த ஆண்டு இந்தத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கங்கள்கோரிக்கை விடுத்துள்ளன.
இதையடுத்து வரும் 6ம் தேதி தமிழக அரசு சார்பில் போக்குவரத்துத் துறை அமைச்சர் நயினார் நாகேந்திரன்,போக்குவரத்துறைச் செயலாளர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன்பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
இந்தப் பேச்சுவார்த்தையில் சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., அண்ணா தொழிலாளர் சங்கம், திராவிடத் தொழிலாளர்சங்கம் உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்கங்களும் கலந்துகொள்கின்றன.
இந்தப் பேச்சுவார்த்தை சென்னையில் உள்ள பல்லவன் அரங்கத்தில் வரும் 6ம் தேதி நடைபெறுகிறது.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications