கரூர் அருகே தூக்கில் தொங்கிய காதல்ஜோடி- தற்கொலையா?
கரூர்:
கரூருக்கு அருகேயுள்ள மலை பகுதியில் ஒரு ஆணும், பெண்ணும் தூக்கில் தொங்கியநிலையில் பிணமாக இருந்தனர். இவர்கள் இருவரும் கொல்லப்பட்டார்களா அல்லதுதற்கொலை செய்து கொண்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கரூர் மாவட்டம் காமாட்சி மலை உச்சிதெற்கு அய்யம்பாளையம் என்ற இடத்திலுள்ள மலைபகுதியில் ஒரு ஆணும்,பெண்ணும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டனர்.
இதை பார்த்த வன காவலர் மாணிக்கம், பி.இடையப்பட்டி கிராம நிர்வாகியிடம் தகவல்கூறினார். அவர் உடனடியாக பாலவிடுதி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
பாலவிடுதி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தூக்கில் தொங்கிய பிணங்களை கைப்பற்றிவிசாரணை நடத்தினர்.
பிணமாக இருந்தவர்களில் வாலிபர் தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த சிவா என்கிறதுரைசாமி (வயது 25) என்பதும், அவர் தற்போது மணப்பாறை மலையம்பட்டியில் வசித்துவந்ததும் விசாரணையின் போது தெரிய வந்தது.
பிணமாக இருந்த பெண் யார் என்பதும், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதும்தெரியவில்லை.
இவர்கள் இருவரும் காதலர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது இவர்களை யாராவது கொன்றுவிட்டு தூக்கில் தொங்கவிட்டார்களா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணைசெய்து வருகிறனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications