காஷ்மீர்: தீவிரவாதிகள் தாக்கி 4 ராணுவ வீரர்கள் பலி
ஸ்ரீநகர்:
தீவிரவாதிகளின் தற்கொலைப்படையினர் ராணுவ முகாமுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள்கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
நேற்று இரவு 9 மணி அளவில் அவர்கள் இருவரும் ஒரு மரப்பெட்டிக்குள் மறைந்துகொண்டு ராணுவவீரர்கள் மீதுதுப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். பதிலுக்கு இராணுவத்தினரும் சுட்டனர்.
சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்தச் சண்டையில் 4 ராணுவ வீரர்கள் அதே இடத்தில் கொல்லப்பட்டனர். மேலும் 4வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
சண்டை ஓய்ந்த பிறகு ராணுவ முகாமிற்குள் புகுந்துள்ள தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்க வீரர்கள் தேடுதல் வேட்டைநடத்தினர்.
அப்போது ஒரு மரப்பெட்டிக்குள் ஒளிந்து கொண்டிருந்த தீவிரவாதிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீதுராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான்.
படுகாயமடைந்த மற்றொருவனை இன்னும் பிடிக்க முடியவில்லை. அவன் இன்னும் ராணுவ முகாமிற்குள்தான்ஒளிந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் இந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் எங்கள் அமைப்பின் தற்கொலைப்படையினர் தான்என்றும் அவர்கள் பெயர் அபு ஹாசிம் மற்றும் அபு முஸ்லீம் என்றும் லஸ்கர்-ஏ-தொய்பா அறிவித்துள்ளது.
22 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
கடந்த ஒரு நாளில் காஷ்மீர் மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த சண்டையில் 22 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர். மேலும் 6 பேரைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சண்டையில்அப்பகுதியில் வாழும் ஒரு அப்பாவியும் கொல்லப்பட்டார்.
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லையைக் கடக்க முயன்ற 10 தீவிரவாதிகளைப் பாதுகாப்புப்படையினர் சுட்டுக் கொன்றனர். மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தான்பிடித்துவைத்துள்ள காஷ்மீருக்குள் சென்று தீவிரவாதப் பயிற்சியில் ஈடுபடச் சென்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஹர்கத்-உல்-முஜாஹிதீன், டெஹ்ரீக்-ஏ- ஜிகாதி இஸ்லாமி மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன்ஆகிய தீவிரவாத அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இதேபோல பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த தாக்குதலில் குப்வாராமாவட்டத்தில் 2 பேரும், தோடா மாவட்டத்தில் 2 பேரும் கொல்லப்பட்டனர். மேலும் மற்ற பகுதிகளில் நடந்தசண்டைகளில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
பூஞ்ச் மாவட்டத்ச்ை சேர்ந்த குல்சார் அஹமது என்பவர் ராணுவத்தினருக்கு துப்பு கொடுப்பதாகக் கூறி, அவரைதீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications