ஜெ.க்கு தமிழக விடுதலைப் படையினர் இ-மெயில் மூலம் கொலை மிரட்டல்
சென்னை:
முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு தமிழக விடுதலைப் படைஅமைப்பினர் இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
வழக்கு விசாரணைக்காக ஜெயலலிதா நீதிமன்றத்துக்கு வரும்போது அவரைக் கொலை செய்வோம் என்றுஅவ்வமைப்பினர் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பல பத்திரிக்கை அலுவலகங்களுக்கு வந்த அந்த இ-மெயில் கடிதத்தில் தமிழக விடுதலைப்படையினர் கூறியிருப்பதாவது:
கடந்த 54 ஆண்டுகளாக இந்தியக் கொள்கைகள் காரணமாக தமிழகம் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.இந்தியாவின் இந்த மேலாதிக்கம் வெளியேற்றப்பட வேண்டும்.
சர்வதேச மேலாதிக்கம் காரணமாகத் தமிழகத்தில் தோன்றியுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் தங்கள்அலுவலகங்களைக் காலி செய்துவிட்டு, தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும்.
தமிழகத்தில் பொருளாதாரத்தைச் சீர்குலைத்த சில அரசியல்வாதிகளைக் களையெடுக்க உள்ளோம். முதல் கட்டமாகஜெயலலிதாவைக் கொலை செய்ய எங்கள் தலைமை கட்டளையிட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்காக அவர் நீதிமன்றத்துக்கு வரும்போது அவரை நாங்கள் கொலை செய்வோம்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவத்தினரும் உடனடியாக வெளியேறவேண்டும். இல்லையென்றால் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
தமிழகத்துக்கு விடுதலை கேட்பது எங்களது தேச உரிமை ஆகும். அதற்கு எங்களுக்கு அதிகாரமும் உண்டு என்றுஅக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இக்கடிதம் குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் கூறியதாவது:
இந்த மிரட்டலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. மிரட்டல் கடிதத்தை அனுப்பியுள்ள தமிழக விடுதலைப்படையின் கடந்த கால நடவடிக்கைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
எங்கிருந்து இந்த இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்துவிட்டோம். இக்கடிதம்அனுப்பியவர்களைப் பிடிப்பதற்காக தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது என்றார் முத்துக்கருப்பன்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications