ஆக்கிரமிப்பு கட்டடத்தை மசூதி நிர்வாகம் இடித்தது: ஓசூரில் பதட்டம்
Subscribe to Oneindia Tamil
ஓசூர்:
ஓசூர் நகரில் மசூதி அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த நகராட்சி ஊழியரின் கட்டடம் இடிக்கப்பட்டதால்,அங்கு பதட்டம் ஏற்பட்டது.
மசூதியை ஒட்டிக் கட்டப்பட்டிருந்த அக்கட்டம் கடந்த 25 ஆண்டுகளாக அங்குதான் இருந்தது.
அதை இடிக்கச் சொல்லி நகராட்சி உத்தரவிட்ட போதிலும், அந்தக் கட்டடத்துக்குச் சொந்தக்காரரான நகராட்சிஊழியர் அதை இடிக்கவில்லை.
இதையடுத்து, மசூதி நிர்வாகமே அந்தக் கட்டடத்தை இடித்தது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
பின்னர் நகராட்சித் தலைவர் நஞ்சுண்டசாமி வந்து, சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி ஏற்படுத்தினார்.












Click it and Unblock the Notifications