6 அதிமுக மாவட்ட செயலாளர்கள் நீக்கம்: ஜெ. அதிரடி
சென்னை:
கரூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கன்னியாகுமரி, நாமக்கல் ஆகிய ஆறு மாவட்டங்களின் அதிமுகசெயலாளர்களை நீக்கி உத்தரவிட்டுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
கடந்த சட்டசபை தேர்தலைவிட சென்ற மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிமுகபெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
அதிமுகவின் கோட்டை என்று கருதப்பட்ட விருதுநகர் மாவட்டத்திலும் அதிமுகவுக்குப் பெரும் சரிவுஏற்பட்டுள்ளது. முக்கிய நகராட்சிகளையெல்லாம் கோட்டை விட்டுள்ளது அதிமுக.
எப்பாடுபட்டாவது வெற்றிக் கனியைத் தட்டி வரவேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகளுக்கு ஜெயலலிதாகடுமையாக உத்தரவிட்டிருந்த போதிலும், திமுகவின் வெற்றியை அவர்களால் தடுக்க முடியவில்லை.
இந்நிலையில் படுதோல்வியைச் சந்தித்துள்ள மாவட்டங்களின் அதிமுக செயலாளர்களை நீக்கியுள்ளார் ஜெயலலிதா.இதுகுறித்து அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை:
கரூர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த பாப்பா சுந்தரத்துக்குப் பதிலாக கு. வடிவேல் என்பவர்நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவருமே எம்.எல்.ஏக்கள்.
விருதுநகர் மாவட்டத்திற்கு புதிய அதிமுக செயலாளராக சிவகாசி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இரா.விநாயகமூர்த்தி அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்ட அதிமுக செயலாளர் ஏ.ஜி. மச்சக்குமார், இம்மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டி ஆகியோர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். செல்லூர் ராஜு தற்போது மதுரை மாவட்டச்செயலாளராக்கப்பட்டுள்ளார். அவர் சென்ற மாதம் நடந்த மதுரை மேயர் தேர்தலில் தோல்வியுற்றார்.
மதுரை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து தூக்கப்பட்டுள்ள மச்சக்குமார் மாவட்ட ஜெயலிதா பேரவைச்செயலாளராகியுள்ளார். மேலும் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக எம்.எஸ். பாண்டியன்நியமிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த கே.பி. ராஜேந்திர பிரசாத் பொறுப்பிலிருந்துவிடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக பி.சி.என். திலக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவி எஸ். ஷாஜகானிடமிருந்து பி.கே.டி. நடராஜனுக்குச் சென்றுள்ளது.
நாமக்கல் மாவட்டச் செயலாளர் எஸ்.வி.டி. சின்னசாமி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, எஸ். அன்பழகன்அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களைத் தவிர அதிமுகவின் அமைப்புச் செயலாளர்கள் பொறுப்பிலிருந்த வி. பாலகிருஷ்ணன், அ.பாண்டியம்மாள், எஸ்.வி.டி. சின்னசாமி, இரா. விநாயகமூர்த்தி, எஸ். அன்பழகன், உஷாவரதன் என்ற செ.து.வரதராஜன் ஆகியோரும் தங்கள் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் உஷா வரதன் ஏற்கனவே வகித்து வரும் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார்என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தென் சென்னை மாவட்ட செயலாளர் - சைதை துரைசாமி
இதற்கிடையே சமீபத்தில் அதிமுகவில் சேர்ந்துள்ள சைதை துரைசாமிக்கு தென் சென்னை மாவட்டச் செயலாளர்பொறுப்பை அளித்துள்ளார் ஜெயலலிதா.
கராத்தே தியாகராஜன் துணை மேயராகியதையடுத்து, அவரிடமிருந்து அப்பதவியை விடுவித்து சைதைதுரைசாமிக்கு ஜெயலலிதா கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications