தர்மபுரி மாணவிகள் எரிப்பு வழக்கு: இன்று சாட்சி விசாரணை
சென்னை:
தர்மபுரி அருகே, கோவை விவசாயக் கல்லூரி மாணவிகள் 3 பேர் அதிமுகவினரால் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இன்று(திங்கள்கிழமை) முதல் சாட்சிகள் விசாரணை துவங்குகிறது.
ஜெயலலிதாவுக்கு எதிராக தனி கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழகம் முழுவதிலும் அதிமுகவினர் போராட்டத்தில் இறங்கினர். தர்மபுரிஅருகே இலக்கியம்பட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த கோவை விவசாயக் கல்லூரி மாணவர்களின் பஸ்சுக்கு அதிமுகவினர் தீவைத்தனர்.
இதில் பஸ்சில் இருந்த கல்லூரி மாணவ, மாணவியர் தீயில் கருகினர். இவர்களில் 3 பேர் உயிருடன் எரிந்து சாம்பலாயினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 31 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 28 பேர் ஜாமீனில் விடுதலை ஆகி விட்டனர். 3 பேர் மட்டும்தற்போது சேலம் மத்திய சிறையில் உள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. திங்கள்கிழமை முதல் சாட்சிகள் விசாரணை துவங்குகிறது.மொத்தம் 13 பேர் சாட்சியம் அளிக்கவுள்ளனர். 21 பேரிடம் விசாரணை நடக்கிறது.
சாட்சிகள் விசாரணையையொட்டி நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications