ஓய்வுக்கு சென்னை வந்தது அமெரிக்க போர்க் கப்பல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆப்கானிஸ்தானில் தாக்குதலுக்கு உதவி வரும் அமெரிக்க போர்க் கப்பலான யு.எஸ்.எஸ். ஒ பிரைன் ஓய்வுக்காகஇன்று சென்னை வந்தது.
ஆப்கானிஸ்தானில் போர் துவங்கியதில் இருந்து அரபிக் கடலிலும், இந்தியப் பெருங்கடலிலும் அமெரிக்கா தனதுபோர்க் கப்பல்களைக் குவித்து வருகிறது.
இந் நிலையில் ஒரு அமெரிக்க நவீன போர்க் கப்பல் சென்னை துறைமுகம் வந்து சேர்ந்தது. இந்தக் கப்பல்நல்லெண்ணப் பயணமாக இந்தியா வந்துள்ளதாக கடற்படைத் தெரிவித்துள்ளது. இது ஆப்கானிஸ்தானில் தாக்கிவரும் விமானங்களுக்கு உதவியாக செயல்பட்டு வந்தது.
664 மீட்டர் நீளமும் 9200 டன் எடையும் கொண்ட இந்தக் கப்பலில் 300 வீரர்கள் உள்ளனர். இந்தக் கப்பல் சிலதினங்கள் சென்னையில் இருக்கும்.












Click it and Unblock the Notifications