குழந்தையின் உயிரைப் பறித்த தேர்தல் மோதல்
சென்னை:
விழுப்புரம் அருகே உள்ளாட்சித் தேர்தலில் தோற்ற ஒருவர், எதிர் வேட்பாளரின் ஒன்றரை வயது குழந்தையைகழுத்தை நெரித்துக் கொன்றார்.
விழுப்புரம் அருகே உள்ளது திருவெண்ணை நல்லூர். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் விஜயக்குமார். அதேபகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இருவரும் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டனர்.
ஆனால் இருவரும் வெற்றி பெறவில்லை. இதனால் இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சுமத்தி வந்தனர்.இருவருக்கும் இடையே வாய்ச்சண்டையும் நடந்துள்ளது.
இந்த நிலையில், விஜயக்குமாரின் மனைவி செல்வகுமாரி தனது ஒன்றரை வயது குழந்தையை பக்கத்து வீட்டில்உள்ள சுதா என்ற பெண்ணிடம் கொடுத்து விட்டு வெளியே சென்றுள்ளார். சுதா குழந்தையை வீட்டு வாசல் அருகேவிளையாட விட்டு விட்டு வீட்டுக்குள் பெருக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சுப்ரமணியன் வந்துள்ளார். சுதாவிடம், குழந்தையின் அப்பா, அம்மா எங்கே என்றுகோபத்துடன் கேட்டுள்ளார். அவர்கள் வெளியே போயுள்ளனர் என்று சுதா சொல்லியபோது, திடீரெனகுழந்தையை எடுத்து அதன் கழுத்தை நெரித்துள்ளார்.
இதில் குழந்தை மூச்சுத் திணறி சிறிது நேரத்தில் இறந்து விட்டது. இதையடுத்து குழந்தையை கீழே போட்டு விட்டுஅங்கிருந்து அவர் ஓடிவிட்டார்.
பதறிப் போன சுதா, உடனடியாக செல்வகுமாரியைத் தேடிச் சென்று தகவல் தெரிவித்தார். இதையடுத்துவிஜயகுமார் போலீஸில் புகார் கொடுத்தார். தலைமறைவாகி விட்ட சுப்ரமணியனை போலீஸார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications