ஜெயலலிதாவுக்கு வந்த கொலை மிரட்டல்: மர்மங்கள்... மர்மங்கள்...
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இ-மெயில் மூலம் வந்த கொலை மிரட்டலை யார் அனுப்பியது என்பதில்பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.
அதற்கு முன் ஜெயலலிதாவுக்கு இதற்கு முன்பே இதுபோன்ற கொலை மிரட்டல் வந்துள்ளன.
1991ம் ஆண்டு மிகப் பெரிய மெஜாரிட்டியுடன் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு வந்தது. அதற்குமுந்தைய திமுக ஆட்சியின்போது விடுதலைப் புலிகள் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்து விட்டது என்று கூறிஆட்சியை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்தது.
முதல்வரான பின்னரும் ஜெயலலிதா விடுதலைப் புலிகளின் ஹிட் லிஸ்ட்டில் இடம் பெற்றிருப்பதாக தெரிய வந்தது.
இதையடுத்து அவருக்கு கருப்புப் பூனைப் படைப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. அவருக்கு மட்டுமல்லாது ஜனதாக்கட்சித் தலைவர் சுப்ரமணியசுவாமி உள்ளிட்ட சிலருக்கும் கருப்புப் பூனைப் படை பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டன. அந்த நேரத்தில்சந்தனக் கடத்தல் வீரப்பன் மூலம் ஜெயலலிதாவுக்கு மிரட்டல் ஏற்பட்டதால் அவருக்கு பாதுகாப்புபலப்படுத்தப்பட்டது.
இப்போது மீண்டும் ஒருமுறை ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. அதுவும் இ-மெயில் மூலம்.இப்போது கொலை மிரட்டல் விடுத்துள்ள தமிழர் விடுதலைப் படை போன்ற நக்சலைட் அமைப்புகள் அப்போதும்இருந்தன என்றாலும் இப்போதுள்ள அளவுக்கு பலம் வாய்ந்ததாக இல்லை.
கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்ற பிறகுதான் தமிழர் விடுதலைப் படை, தமிழ் தேசிய மீட்புப்படை போன்ற நக்சலைட் அமைப்புகள் லைம்லைட்டுக்கு வந்தன. தமிழ்த் தீவிராவதிகளின் துணையுடன்தான்வீரப்பன் ராஜ்குமாரை கடத்தியது தெரிய வந்தது.
தமிழகத்தில் நக்சலைட் அமைப்புகள் பலம் பெற்றிருப்பது இந்தக் கடத்தல் மூலம் வெட்ட வெளிச்சமானது.அப்போது கருணாநிதியின் ஆட்சி தமிழகத்தில் இருந்தது.
ராஜ்குமார் கடத்தில் தமிழ்த் தீவிரவாதிகளின் கரம் இருந்தது தெரிய வந்ததும் தீவிரவாதிகளை கைது செய்யகருணாநதி உத்தரவிட்டார். நக்சலைட் அமைப்புகளுக்குத் தடை விதிக்குமாறு மத்திய அரசையும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இப்போது விடுதலைப் புலிகள் தவிர தமிழ்த் தீவிரவாதிகளாலும்ஜெயலலிதாவுக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற சூழ்நிலை உருவானது.
கடந்த 3ம் தேதி சனிக்கிழமை டிரிப்யூன் பத்திரிகைக்கு ஒரு இ-மெயில் வந்தது. அந்த இ-மெயிலில் கூறப்பட்டிருந்தவிவரம்:
கடந்த 54 ஆண்டுகளாக இந்தியாவால் தமிழ்நாடு நசுக்கப்பட்டு வந்திருக்கிறது. தமிழர்களை நசுக்கும்இந்தியாவின் போக்கு நிறுத்திக் கொள்ளப்பட வேண்டும். இந்த எச்சரிக்கைக்குப் பிறகு தமிழகத்தில் உள்ள இந்தியநிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் உடனடியாக தங்களது வர்த்தகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தற்போது தமிழக அரசியலை சுத்தப்படுத்த நாங்கள் முயற்சிகளைத் தொடங்கியுள்ளோம். முதல் கட்டமாகஜெயலலிதாவைக் கொல்ல எங்களது கமாண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். கோர்ட்டுக்கு வரும்போது அவர்கொல்லப்படுவார்.
தமிழகத்திலிருந்து வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய ராணுவம் ஆகியவை உடனடியாக வெளியேற வேண்டும்.இல்லாவிட்டால் அதற்கான விலையை அவர்கள் கொடுக்க நேரிடும்.
தமிழகத்திற்கு சுதந்திரம் பெற்றுத் தரும் உரிமை எங்களுக்கு உள்ளது. தமிழகம்தான் எங்கள் நாடு.
இப்படிக்கு சீலன்
கமாண்டர்,
சென்னை படைப் பிரிவு,
தமிழ் விடுதலை படை
இவ்வாறு அந்த இ-மெயிலில் கூறப்பட்டிருந்தது.
இந்த இ-மெயில் கடிதம் குமுதம், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய பத்திரிகை அலுவலகங்களுக்கும்அனுப்பப்பட்டுள்ளதாக மெயிலில் கூறப்பட்டிருந்தது. ஆனால் அப்படி ஒரு மெயில் தங்களுக்கு வரவில்லை என்றுசம்பந்தப்பட்ட பத்திரிகைகள் கூறி விட்டன.
இ-மெயில் மிரட்டலையடுத்து ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.அவரது வீடு செல்லும் சாலையின் ஆரம்பத்தில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்படாமல் இருந்தனர். தற்போதுசாலை ஆரம்பிக்கும் இடத்திலிருந்தே சோதனை செய்தே யாரையும் உள்ளே அனுப்புகின்றனர்.
தமிழ்த் தீவிரவாதிகளின் கொலை மிரட்டலையடுத்து இத்தகைய தீவிரவாதிகள் தமிழகத்தில் வளர்ந்ததற்குக்காரணமே திமுக தலைவர் கருணாநிதிதான் என்று முதல்வர் பன்னீர் செல்வம், நிதியமைச்சர் பொன்னையன்ஆகியோர் காட்டமாக அறிக்கை விட்டனர்.
"எங்களை ஏதோ சதியில் மாட்ட வைப்பதற்காகவே இவர்கள் இவ்வாறு கூறுகின்றனர், அதை சந்திக்கத் தயார்.முன்னாள் முதல்வருக்கே கொலை மிரட்டல் வருகிறதென்றால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்தளவுக்கு உள்ளதுஎன்பதை நான் சொல்ல வேண்டியதில்லை, மக்களே புரிந்து கொள்வார்கள்" என்று கருணாநிதி பதில் அறிக்கைவிட்டார்.
இவர்களின் அறிக்கைப் போர் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கையில், இ-மெயில் எங்கிருந்து வந்தது என்பதைகண்டுபிடித்தது தமிழக போலீஸ். பாண்டிச்சேரியில் உள்ள ஒரு இன்டர்நெட் சென்டரிலிருந்துதான் அந்த மெயில்வந்தது என்பதை போலீஸார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து தமிழக போலீசின் தனிப்படை பாண்டிச்சேரிக்கு விரைந்து சென்று சம்பந்தப்பட்ட இன்டர்நெட்சென்டருக்குச் சென்று 2 பேரை தங்களது கஸ்டடிக்குக் கொண்டு வந்து விசாரணையைத் தொடங்கியது.
பாண்டிச்சேரி மாதா கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ இன்டர்நெட் மையத்திலிருந்துதான் அந்த மெயில்அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்டர்நெட் மையத்தின் உரிமையாளர்களான கோவிந்தராஜன் மற்றும்திருவேங்கடம் ஆகியோர் தற்போது போலீஸ் விசாரணையில் உள்ளனர்.
இந்நிலையில் திடுக்கிடும் வதந்தி ஒன்று தமிழக போலீஸ் வட்டாரத்திலேயே கிளம்பியுள்ளது.
இ-மெயில் பாண்டிச்சேரியிலிருந்து வந்தது என்று தமிழக போலீஸார் கூறியுள்ளனர்.
ஒரு இ-மெயில் எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டுபிடிப்பது பெரிய சிரமமில்லை. இ-மெயில் அனுப்பப்பட்டகம்ப்யூட்டரின் ஐ.பி. முகவரியை வைத்து அதைக் கண்டுபிடிக்கலாம். அல்லது இ-மெயில் முகவரியைக் கொண்டஇணையத் தளத்தைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் இ-மெயில் அனுப்பியவரின் கம்ப்யூட்டர் ஐ.பி.முகவரியைக் கேட்டுப் பெறலாம்.
அவ்வாறு தமிழ் விடுதலைப் படையினர் அனுப்பிய இ-மெயில் இணையத் தளம் ஹாட்மெயில் ஆகும்.
போலீஸ் தரப்பில் இ-மெயில் அனுப்பிய சென்டரைக் கண்டுபிடித்து விட்டதாக கூறியபோதிலும், இதுதொடர்பாகஹாட்மெயில் இணைய தளத்தைத் தொடர்பு கொண்டு இன்னும் கம்ப்யூட்டர் ஐ.பி. முகவரியைக் கேட்டுப்பெறவில்லை என்று கூறப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில் கீழ்க்கண்ட சந்தேகங்கள் எழும்பியுள்ளன:
- கோர்ட் வளாகத்தில் ஜெயலலிதாவைக் கொல்வோம் என்று தீவிரவாதிகள் கூறியுள்ளனர். இங்கு ஒரு சந்தேகம் எழுகிறது. லண்டன் ஹோட்டல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகள் தொடர்பாக ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராவதைத் தவிர்த்து வருகிறார். இப்படிப்பட்ட மிரட்டல் இருப்பதாக கூறி கோர்ட்டுக்குச் செல்வதிலிருந்து ஜெயலலிதா விலக்குப் பெற முடியும் என்பதால், இதுபோன்ற போலியான இ-மெயிலை ஜெயலலிதாவுக்குச் சாதகமான யாராவது அனுப்பியிருக்கலாம்.
- குமுதம், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய பத்திரிகைகளுக்கும் இந்த இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளதாக மெயிலில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மெயிலில் பெறுபவர் முகவரியாக டிரிப்யூன் பத்திரிக்கை ஆசிரியரின் இ-மெயில் முகவரி மட்டுமே உள்ளது. குமுதம், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையும் தாங்கள் இதுபோன்ற இ-மெயிலைப் பெறவில்லை என்று கூறியிருப்பது இங்கு நினைவு கூறத்தக்கது.
- வீரப்பன், ராஜ்குமாரைக் கடத்திய செய்தி முதலில் பாண்டிச்சேரியிலிருந்துதான் கேசட் மூலம் வந்தது. அதை அனுப்பியது தமிழ் விடுதலைப் படை. மேலும், பாண்டிச்சேரி தற்போது ரவுடிகள், தாதாக்களின் முக்கிய கேந்திரமாக மாறியுள்ளது. எனவே, பாண்டிச்சேரியிலிருந்து இ-மெயில் வந்தால் அது அனைவராலும் நம்பும்படி இருக்கும் என்பதால் பாண்டிச்சேரியிலிருந்து இ-மெயில் அனுப்பப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த இ-மெயில் முகவரி கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதிதான் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள்இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது.
மொத்தத்தில், இந்த இ-மெயிலில் தமிழக உளவுப் பிரிவு போலீஸாரின் கை இருப்பதாக ஒரு வதந்திகிளம்பியுள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
ஒருவேளை உண்மையிலேயே இது கொலை மிரட்டலாக இருந்தால் அது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்தகவலையை ஏற்படுத்துகிறது.
ஜெயலலிதாவுக்கு மட்டும் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று எடுத்துக் கொள்ளாமல் தீவிரவாதத்திற்கு எதிராகஅனைவருக்கும் வந்த மிரட்டலாக இதை கருதி தீவிரவாதிகள் எந்த ரூபத்தில் இருந்தாலும் அவர்களை வேரறுக்கவேண்டும் என்பதே சாதாரண பொது ஜனத்தின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு என்பதை புரிந்து கொண்டு தமிழகபோலீஸார் செயல்பட வேண்டும்.
அரசியல் விளையாட்டுக்கு இந்த இ-மெயிலை பயன்படுத்தாமல், விரைவில் மெயில் அனுப்பிய உண்மைகுற்றவாளியை போலீஸார் கைது செய்ய வேண்டும் என்று தமிழகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications