பா.ஜ.கவுடன் இணைகிறது எம்.ஜி.ஆர். அதிமுக
டெல்லி:
எம். ஜி.ஆர் அதிமுகவை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைப்பது குறித்து பிரதமர் வாஜ்பாய் இந்தியா திரும்பியவுடன் முடிவு எடுக்கப்படும் என்று எம்.ஜி.ஆர்.அதிமுக தலைவர் எஸ் திருநாவுக்கரசு கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் எம்.ஜி.ஆர். அதிமுகவும் அங்கம் வகிக்கிறது. அக்கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைப்பது குறித்து ஆலோசனை செய்துவருவதாக அக்கட்சியின் தலைவர் திருநாவுக்கரசு கூறியுள்ளார்.
கடந்த மாதம் 5ம் தேதி சென்னையில் பாஜக.வின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திருநாவுக்கரசுஅழைக்கப்பட்டார். அவரும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதையடுத்து எம்.ஜிஆர். அதிமுக பா.ஜ.கவுடன் இணைய போவதாக செய்திகள் பரவின.
இந்நிலையில் தற்போது டெல்லியில் தங்கியிருக்கும் திருநாவுக்கரசுவும் எம்.ஜி.ஆர். அதிமுகவை பா.ஜ.கவுடன் இணைப்பது குறித்து ஆலோசனை செய்துவருவதாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், எம்.ஜி.ஆர். அதிமுகவை பாஜகவுடன் இணைப்பது குறித்து ஆலோசனை செய்துவருகிறேன்.
பிரதமர் வாஜ்பாய் வெளிநாடு சுற்றுப்பயணம் ம்ேறகொண்டுள்ளார். அவர் திரும்பி வந்த பின் எம்.ஜி.ஆர். அதிமுக- பா.ஜ.க. இணைப்பு பற்றி இறுதி முடிவுஎடுக்கப்படும் என்றார்.
மத்திய அமைச்சராக இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் இறந்த பின், தமிழகத்தில் பிரபலமான தலைவர் இல்லாமல் பா.ஜ.க. பின்னடைவு கண்டிருந்தது.
இந்நிலையில் திருநாவுக்கரசு அவருக்கென்று தனி செல்வாக்கு பெற்று பல இடங்களில் பிரபலமாக இருந்து வருவது பா.ஜ.க.வின்கவனத்தை ஈர்த்துள்ளது.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலிலும் இரண்டு நகராட்சி தலைவர் பதவிக்கு எம்.ஜி.ஆர். அதிமுக போட்டியிட்டது. இரண்டிலும் வெற்றியும் பெற்றது.
இதையடுத்து திருநாவுக்கரசை கட்சிக்குள் இழுத்தால் தமிழகத்தில் பா.ஜ.கவின் பலம் பெருகும் என்று அக் கட்சித் தலைவர்கள் நினைக்கின்றனர்.
தற்போது திருநாவுக்கரசும் பா.ஜ,கவின் இணைவது குறித்து ஆலோசனை செய்வதாக கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
வாஜ்பாய் வெளிநாடு சுற்றுப்பயணம் முடிந்து திரும்பிய பின் திருநாவுக்கரசு பா.ஜ.கவில் இணைவாரா இல்லையா என்பது தெரியவரும்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications