கோவை: பொது இடங்களில் "தம்" அடித்த 219 பேர்மீது வழக்கு
கோயம்புத்தூர்:
நாடு முழுவதும் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கோவையில் முதல்முறையாக நடவடிக்கை துவக்கப்பட்டு, 219 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடைவிதிக்க வேண்டும் என்று கோரி, மஹாராஷ்டிர மாநிலகாங்ரஸ் தலைவர்களில் ஒருவரான முரளிதியோரா, உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பஸ்ஸ்டான்டு, ரயில்நிலையம், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொதுஇடங்களில் புகைபிடிக்க அனைத்து மாநிலங்கள், மற்றும் யூனியன் பிரதேசங்களும் தடைவிதிக்க வேண்டும் என்றுஉத்தரவிட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை இந்த தீர்ப்பு வெளியிடப்பட்டது.
ஏற்கனவே டெல்லி, கோவா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பொது இடங்களில் புகைபிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று (புதன்கிழமை) தமிழகத்தில் முதல் முறையாக, கோயம்புத்தூர் போலீசார் திடீர் ரெய்டில்ஈடுபட்டனர். அப்போது கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களின் பொது இடங்களில் புகைபிடித்துக்கொண்டிருந்த 219 பேர் பிடிக்கப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட எஸ்.பி., சொக்கலிங்கம், நிருபர்களுக்குப் பேட்டியளிக்கையில் கூறியதாவது,
கோவை மாவட்டத்தில், பொது இடங்களில் புகைபிடித்தாக திருப்பூரில் 23 பேரும், அவிநாசியில் 51 பேரும்,பல்லடத்தில் 17 பேரும், பொள்ளாச்சியில் 35 பேரும், போத்தனூரில் 35 பேரும், பெரிய நாயக்கன் பாளையத்தில்25 பேரும் போலீசாரால் பிடிக்கப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
பிறகு அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, அபராதம் செலுத்திய பிறகு விடுவிக்கப்பட்டனர்.
மேலும் சிகரெட் விற்கப்படும் பெட்டிக்கடைகளில், நெருப்புப் பற்றவைப்பதற்கான நெருப்புக்கயிறு, மின்சாரலைட்டர் போன்றவற்றை வைத்திருக்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் கடைக்காரர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் வெறும் எச்சரிக்கை மட்டுமே
கோவையில் போலீசார் நடத்திய திடீர் ரெய்டு குறித்து தகவல் அறிந்ததும், சென்னை போலீசாரும் நேற்று தங்கள்நடவடிக்கையைத் தொடங்கினர். இவர்கள் பொது இடங்களில் புகைபிடித்துக் கொண்டிருந்தவர்களை எச்சரிக்கமட்டுமே செய்தனர். ஆனால் யார் மீதும் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications