பாகிஸ்தானில் வன்முறை- 3 பேர் பலி
இஸ்லமாபாத்:
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து பாகிஸ்தானில் முஸ்லீம்கள் இன்று(வெள்ளிக்கிழமை) பந்த் மற்றும் பேரணியில் வன்முறை வெடித்தது. கலவரத்தை அடக்க போலீசார் நடத்தியதுப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாயினர்.
முழு அடைப்பின் ஒரு பகுதியாக பல நகரங்களில் முஸ்லீம்கள் கண்டனப் பேரணிகளை நடத்தினர்.
பாகிஸ்தானின் மத்தியப் பகுதியில் உள்ள சர்கோதா நகரில் இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது.இதையடுத்து, கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி ஆகிய நகரங்கள் அமைதியாகவே இருந்தன. ஆனால்குவெட்டா நகரில் மதவாதிகள் அழைப்பு விடுத்திருந்த வேலை நிறுத்தத்துக்கு முழு ஆதரவு இருந்தது.பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.
முன்னதாக, பாகிஸ்தான் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 500க்கும் மேற்பட்ட முஸ்லீம்மதவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
பெஷாவரில் 250 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கராச்சியில் 150 பேரும், லாகூரில் 70 பேரும்,ராவல்பிண்டியில் 50 பேரும் கைது செய்யப்பட்டனர்.
முஷாரப் எச்சரிக்கை:
இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப், பாகிஸ்தானில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் மதவாதிகளைக் கடுமையாக எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தானின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக யாரேனும் செயல்பட்டால் அதை பார்த்துக் கொண்டுஇந்த அரசு பேசாமல் இருக்காது, மக்களும் அதை விரும்பமாட்டார்கள் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications