பத்திரிக்கைகளில் பெயர் வர வீண் பழி கூறுகிறார் கருணாநிதி- அமைச்சர்
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி பத்ரிக்கைகளில் தினமும் தனது பெயர் வரவேண்டும் என்பதற்காக, அரசின்நலத்திட்டங்கள் அனைத்தையும் குறை கூறிவருகிறார் என்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் துரைராஜ் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து சென்னையில் நேற்று(வெள்ளிக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்த ஆண்டு 2001-2002 ல் மகளிர் மேம்பாடு முக்கியம் எனக்கருதி, கிராமப்புற மகளிருக்காக துப்புரவு வளாகம்அமைத்து, மகளிர் சுய உதவிக்குழுக்களே பராமரிக்க ஏதுவாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக இந்த ஆண்டு எம்.எல்.ஏ. நிதியிலிருந்து, தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்து 308 கிராம ஊராட்சிகளில்மகளிருக்கான துப்புரவு வளாகம் அமைக்கப்பட உள்ளது.
மேலும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப் பட்ட மாணவ, மாணவியருக்கு விடுதிகள் அமைக்கஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும் ரூ.24 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் கிராமப்புற ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில்,நிறைவேற்றப்பட உள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பத்திரிக்கைகளில் தினமும் தனது பெயர் வரவேண்டும் என்பதற்காக மக்களுக்குப்பயன்படும் திட்டங்களைக் குறை கூறிவருகிறார்.
குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிந்தனைத் திட்டமான கிராமப்புற மகளிர் துப்புரவு வளாகம் கட்டும்திட்டம் இந்தியாவில் முதல் முதலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தை தி.மு.க ஆட்சியில் செயல்படுத்த முடியவில்லை என்ற காழ்ப்புணர்ச்சி காரணமாக தேவையில்லாமல்குறைகூறுவதையே தொழிலாகக் கொண்டு நிருபர்களுக்குப் பேட்டியளித்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications