மொட்டை, பட்டையுடன் தட்டை ஏந்தி போராட்டம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் நூற்றுக்கணக்கான அரசு பஸ் ஊழியர்கள் மொட்டையடித்துக் கொண்டு, நெற்றி நிறையபட்டை பூசிக்கொண்டு கைகளில் தட்டுக்களை ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய 5000க்கும் மேற்பட்ட அரசு பஸ் ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
நான்காவது நாளை எட்டியுள்ள போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று(திங்கள்கிழமை) தீவிரமடைந்தது. மாநிலம் முழுவதிலும் இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைத்துள்ளது இந்தப்போராட்டம்.
மாநிலம் முழுவதிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மொத்தமே 20 சதவிகித பஸ்கள்தான் ஓடுகின்றன. நகரப் பேருந்துகள், வெளியூர்ப் பேருந்துகள் இயக்கம் மிகவும்குறைந்து விட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பஸ் ஊழியர்கள் வினோதமான போராட்டத்தில் இறங்கினர். தலையைநன்றாக மொட்டையடித்துக் கொண்டு, நெற்றியில் பட்டைகளைத் தீட்டிக் கொண்டு, போனஸ் "வேண்டி" கைகளில்தட்டுக்களை ஏந்திப் போராட்டம் நடத்தினர்.
மேலும், தற்காலிக ஊழியர்கள் பஸ்களை எடுக்க விடாமலும் அரசு பஸ் ஊழியர்கள் தடுத்தனர். இதையடுத்து,திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட அரசு பஸ் ஊழியர்கள் போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர்.
சென்னையில் குறைந்த அளவு பஸ்களே ஓடுகின்றன. அவற்றிலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்களேஉள்ளனர்.
தி.நகர் பஸ் டிப்போ முன்பாக மறியல் செய்ய முயன்ற 1000க்கும் மேற்பட்ட அரசு பஸ் ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டனர். திருமங்கலம் பஸ் டிப்போ முன்பாகவும் 500 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள பல்வேறு திருமண மண்டபங்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.இன்று மாலைக்குள் அவர்கள் நீதிமன்றங்களின் முன் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவர்.
இதே போல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மறியல் போராட்டங்கள் காரணமாக ஆயிரக்கணக்கானஅரசு பஸ் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
தேனி மாவட்டத்தில் 171 பேரும், தருமபுரி மாவட்டத்தில் 61 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் மதுரை,திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கான அரசு பஸ்ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல்லில் அரசு பஸ் ஊழியர்கள் தங்கள் குடும்பாத்தாருடன் சேர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, அவர்கள் அனைவரும் குடும்பத்தாருடனேயே போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அதிக பஸ்களை இயக்குவதால் அங்கு 50சதவிகிதத்திற்கும் மேலாக போக்குவரத்து சீரடைந்துள்ளது. இம்மாவட்டத்தில் மறியல் செய்ய முயன்ற 49 அரசு பஸ்ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications