நார்த்தர்ன் அலையன்ஸ் வசம் 50 சதவீத ஆப்கானிஸ்தான்?
காபூல்:
கடந்த ஒரு வாரத்தில் ஆப்கானிஸ்தானில் பாதி பரப்பளவை நார்த்தர்ன் அலையன்ஸ் கைப்பற்றிவிட்டதாக அந்தப்படையின் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் அப்துல்லா அப்துல்லா கூறினார்.
பல மாகாணங்களை வடக்குக் கூட்டணிப் படையினரான நார்த்தர்ன் அலையன்சிடம் இழந்து வந்த தலிபான்கள்முக்கிய நகரமான மஷார்-ஏ-ஷெரீப்பை மூன்று தினங்களுக்கு முன் இழந்தனர்.
இது தலிபான்களுக்கு பெரும் சறுக்குதலை ஏற்படுத்தியுள்ளது. இந் நகரில் தலிபான்கள் குவித்து வைத்திருந்தஆயுதங்களையும், தளவாடங்களையும் அப்துல் ரஷீத் தோஸ்தம் தலைமையிலான் உஸ்பெக் படைகள்கைப்பற்றிவிட்டன.
இதனால், வடக்கு ஆப்கானிஸ்தானில் பதில் தாக்குதல் நடத்த முடியாத அளவுக்கு தலிபான்கள் நிலைமோசமாகியுள்ளது.
அதே நேரத்தில் அமெரிக்க விமானத் தாக்குதலின் உதவியுடன் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் தொடர்ந்துதலிபான்களை மிகக் கடுமையாகத் தாக்கி வருகின்றனர்.
இதனால், காபூல் நகரை நோக்கி தலிபான்கள் பின்வாங்கி ஓட ஆரம்பித்துள்ளனர்.
நார்த்தர்ன் அலையன்சில் முகம்மத் பகீம் தலைமையிலான படைகள், அப்துல் ரஷீத் தோஸ்தம் தலைமையிலானபடைகள், இஸ்மாயில் கான் தலைமையிலான படைகள் என மூன்று முக்கியப் பிரிவுகள் உள்ளன. இதில்தோஸ்தமுக்கு உஸ்பெகிஸ்தான் உதவுகிறது.
இஸ்மாயில் கானுக்கு ஈரான் உதவுகிறது. முகம்மத் பகீமுக்கு ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியாஆகிய நாடுகள் உதவுகின்றன.
தோஸ்தமின் படைகள் வடமேற்கு ஆப்கானிஸ்தானையும், இஸ்மாயின் கானின் படைகள் வட கிழக்குஆப்கானிஸ்தானையும் மத்திய ஆப்கானிஸ்தானின் சில ஆதிவாசிப் பகுதிகளையும் முகம்மத் பகீமின் படைகள்தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டிய முழு வடக்கு ஆப்கானிஸ்தானையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இப்போது கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தானின் 40 சதவீத பகுதியை இந்தப் படையினர் கைப்பற்றிவிட்டனர். தலைநகர்காபூலை நோக்கி இந்தப் படையினர் முன்னேறி வருகின்றனர்.
டாக்டர் அப்துல்லா அப்துல்லா கூறுகையில், அடுத்த இலக்கு குண்டூஸ் நகரம் தான். இன்று இரவுக்குள் அல்லதுநாளைக்குள் இந்த நகரைப் பிடித்துவிடுவோம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications