வால் நட்சத்திரம்: இந்திய செயற்கைக் கோள்கள் தப்புமா?
பெங்களூர்:
வானில் லியோனாய்டு என்ற வால் நட்சத்திரத்திலிருந்து விழும் எரிகற்கள் நமது செயற்கைக் கோள்கள் மீதுவிழாமல் தடுக்க தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளன என்று இந்திய வின்வெளிஆராய்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.
இந்திய வின்வெளி ஆராய்ச்சிக் கழகம் பல செயற்கைக் கோள்களை ஆராய்ச்சிக்காகவும் தொலைத்தொடர்புக்காகவும் விண்ணில் செலுத்தியுள்ளது.
லியோனாய்டு என்ற வால் நட்சத்திரத்திலிருந்து விழும் எரிகற்கள் வரும் 18ம் தேதி செயற்கைக் கோள்களைத்தாக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
33 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த லியோனாய்டு சூரியனுக்கு மிக அருகில் செல்லும். அப்போது உண்டாகும்வெப்பத்தில் வால் நட்சத்திரத்தின் வால் பகுதியில் உள்ள ஐஸ் மற்றும் அதிலுள்ள தூசு போன்ற பொருட்கள்அதிலிருந்து பிரிந்து கற்கள் போல விழும். இந்த எரிகற்கள் செயற்கைக் கோள்கள் மீது விழுந்தால், அதிலுள்ளசோலார் செல்கள் மற்றும் கண்ணாடிப் பாகங்களை சேதப்படுத்திவிடும்.
சில சமயங்களில் செயற்கைக் கோள்களில் அதிர்வுகளையும் ஏற்படுத்திவிடும். மேலும் மின் மாற்றங்களைஏற்படுத்துவதோடு, செயற்கைக்கோள்களில் உள்ள மைக்ரோ பிராசஸர்களை சேதப்படுத்தவும் வாய்ப்புள்ளது.
இதிலிருந்து செயற்கைக் கோள்களைப் பாதுகாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பலமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்திய செயற்கைக் கோள்களில் உள்ள கேமராக்கள், பதிவுக்கருவிகளை இந்த எரிகல் தாக்குதலின்போது இயக்காமல் நிறுத்திவிடத் திட்டமிட்டுள்ளது.
மேலும் எரிகற்கள் விழும்போது, செயற்கைக் கோளின் சோலார் தகடுகள் மீது கற்கள் விழுாமல் தடுக்க அவைதானாக பக்கவாட்டில் திரும்பிக் கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற செயல்கள் மூலம் அதிகபட்சம் 10 மணி நேரத்திற்கு தொடர்ந்து கற்கள் விழுந்தாலும், அவைசெயற்கைக் கோள்களின் மீது பாதிப்பை ஏற்படுத்தாமல் பாதுகாக்க முடியும்.
இந்த எரிகற்கள் வரும் 18ம் தேதி மாலை 2.30 மணி முதல் 3.30 வரையும், பிறகு மீண்டும் இரவு 10.30 மணி முதல்11.30 மணி வரையும் அதிகமாக விழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications