பஸ் ஊழியர்களின் குடும்பத்தினருக்கு ஸ்வீட் கொடுத்து அசத்திய சேலம் போலீஸ் கமிஷனர்
சேலம்:
சேலம் மத்திய சிறையில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தீபாவளிதினத்தன்று வீட்டுக்கு நே-ரில் சென்று இனிப்புகள் மற்றும் வாழ்த்துக்களை வழங்கி சேலம் -நகர போலீஸார் அசத்தியுள்ளனர்.
போனஸ் கோ-ரி போக்குவரத்து கழக ஊழியர்கள் போராடி வருகின்றனர். இதற்காக ஆர்ப்பாட்டம், சாலை மறியல், தர்ணாஆகியவற்றை நடத்தி ஆயிரக்கணக்கானோர் கைதாகி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வீடுகளுக்கு காவலர்கள் நே-ரில் சென்று இனிப்புகள்வழங்கி தீபாவளி வாழ்த்து கூறுமாறு மாநகர ஆணையர் ராமநாதன் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து கைதாகி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் வீடுகளுக்கு போலீஸார் நே-ரில் சென்று இனிப்புகளைவழங்கி தீபாவளி வாழ்த்துக்களைத் தெ-ரிவித்தனர். மேலும், கவலைப்படாமல் இருக்குமாறும் கனிவாக கூறி அவர்களை ஆறுதல்படுத்தினர்.
நகர போலீஸா-ரின் இந்த திடீர் வாழ்த்தினால் திக்குக்காடிப் போன போக்குவரத்து ஊழியர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சிவெள்ளத்தில் மூழ்கினர்.
கவலை பறந்து போக சந்தோஷமாக இனிப்புகளைப் பெற்றுக் கொண்டு,போலீஸ் கமிஷனர் ராமநாதனுக்கு தங்களது தீபாவளிவாழ்த்துக்களையும், -நன்றிகளையும் தெவித்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications