23ம் தேதி பொது வேலை நிறுத்தம்: அரசு ஊழியர்களுக்கு பஸ் ஊழியர் சங்கங்கள் அழைப்பு
சென்னை:
தாங்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து, அனைத்து தமிழக அரசு ஊழியர்களும்வரும் 23ம் தேதி (வெள்ளிக்கிழமை) பொது வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அரசு போக்குவரத்துக் கழகஊழியர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
மாநிலம் முழுவதுமுள்ள 50 சங்கங்களைச் சேர்ந்த சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் அரசு ஊழியர்கள் தங்களுக்குஆதரவு தெரிவித்து 23ம் தேதி பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று போக்குவரத்துக் கழக ஊழியர்சங்கங்கள் நம்பிக்கையும் தெரிவித்துள்ளன.
இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கோரி அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்களையும் சந்திக்கப்போவதாக சி.ஐ.டி.யூ. சங்கத் தலைவர் டி.கே. ரங்கராஜன் கூறினார்.
மேலும், தங்களுடைய கோரிக்கைகள் குறித்தும், அவைகளுக்கு அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதுகுறித்தும் பொது மக்களிடம் விளக்கிக் கூறுவதற்காக வரும் 20ம் தேதி பொதுக் கூட்டம் நடத்தப் போவதாகவும்ரங்கராஜன் தெரிவித்தார்.
அரசிடம் பேச எங்களுக்கு எந்தவிதத் தயக்கமும் பயமும் கிடையாது. ஆனால், அரசு தொடர்ந்து சொன்னதையேசொல்லிக் கொண்டிருந்தால் பேச்சுவார்த்தையால் எந்தப் பயனும் கிடையாது என்பதால்தான் பேச்சுவார்த்தையில்எங்களுக்கு உடன்பாடில்லை என்று கூறுகிறோம் என்று திமுக எம்.பியான செ. குப்புசாமி கூறினார்.
8.33 சதவீதத்திற்குப் பதில் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்றும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 20,000ஊழியர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் 10 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்போக்குவரத்து ஊழியர்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications