2 தமிழக போலீஸ் எஸ்.பிக்கள் சி.பி.ஐ.க்கு மாற்றம்
சேலம்:
தமிழகப் போலீஸ் துறையில் பணியாற்றும் இரண்டு எஸ்.பி.க்களின் வேண்டுகோளுக்கிணங்க, அவர்கள் இருவரும்சி.பி.ஐ. போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த திமுக ஆட்சியின்போதே தமிழகக் காவல் துறையில் பணியாற்றும் மூன்று எஸ்.பி.க்கள் தாங்கள் சி.பி.ஐ.க்குச்செல்ல விரும்புவதாகவும், தங்களை மாநில அரசுப் பணியிலிருந்து விடுவிக்குமாறும் தமிழக அரசிடம்வேண்டுகோள் விடுதத்திருந்தனர்.
சேலம் மாவட்ட எஸ்.பி. வெங்கட்ராமன், வேலூர் மாவட்ட எஸ்.பி. பிரமோத் குமார் மற்றும் சென்னைடிடாட்ச்மென்ட் எஸ்.பி.யாக இருந்த விஸ்வநாதன் ஆகியோர் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தனர்.
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இவர்களில் விஸ்வநாதனை சென்னை மாநகர் போக்குவரத்து போலீஸ் துணைக்கமிஷனராக நியமித்தது. பிறகு அவரை அப்பதவியில் இருந்து மாற்றி காத்திருப்போர் பட்டியலில் வைத்துவிட்டு,அப்பதவிக்கு கருணாசாகர் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த மூன்று பேருக்கும் சி.பி.ஐ.க்குச் செல்ல தமிழக அரசு அனுமதிஅளித்தது. இதையடுத்து சேலம் மாவட்ட எஸ்.பி. வெங்கட்ராமன் கேரள மாநிலம் கொச்சினுக்கும், விஸ்வநாதன்சென்னை சி.பி.ஐ.க்கும் மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் வெங்கட்ராமனுக்குப் பதில் வேறுயாரும் நியமிக்கப்படவில்லை. மேலும் வேலூர் மாவட்டஎஸ்.பி. பிரமோத் குமாருக்கும் விரைவில் சி.பி.ஐ.யில் பணியிடம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications