பின்லேடனின் இன்னொரு நெருங்கிய நண்பர் சாவு
தாஷ்கண்ட் (உஸ்பெகிஸ்தான்):
பின் லேடனின் தீவிர ஆதரவாளரும், குண்டூஸ் நகரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவருமான ஜூமாநாமாங்கனி கொல்லப்பட்டார்.
அடிப்படையில் உஸ்பெக் இனத்தவரான நாமாங்கனி, தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். குண்டூஸ்நகரையும் இவர் கட்டுப்பாட்டில் தான் தலிபான் கொடுத்திருந்தது.
நாட்டின் வடக்குப் பகுதியில் அனைத்து நகரங்களும் நார்த்தர்ன் அலையன்ஸ் கட்டுப்பாட்டில் வந்துவிட்டநிலையில் குண்டூஸ் நகரம் இப்போது கூட தலிபான் ஆதரவு தீவிரவாதிகளிடம் தான் உள்ளது.
இந்த நகரின் சில தலிபான் கமாண்டர்கள் சரணடைய முன் வந்துவிட்டனர். ஆனால், நாமாங்கனி தொடர்ந்துபோரில் ஈடுபட்டு வந்தார். இவரது படைகள் மீது அமெரிக்க விமானங்களும் நார்த்தர்ன் அலையன்ஸ்படையினரும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இன்று நடந்த பயங்கரத் தாக்குதலில் நாமாங்கனியும் அவரது படையைச் சேர்ந்த 24 பேரும்கொல்லப்பட்டுவிட்டதாக நார்த்தர்ன் அலையன்சின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அப்துல் ரஷீத் தோஸ்தம்தெரிவித்துள்ளார்.
தலிபான்கள் ஆட்சி போய்விட்டாலும் கூட நாமாங்கனியின் கட்டுப்பாட்டில் உள்ள குண்டூஸ் நகரில் தஞ்சம் புகபின் லேடன் திட்டமிட்டிருந்தார். இதற்காக தனது அரேபிய வீரர்களையும், பாகிஸ்தான், செசன்யாவிலிருந்துஅழைத்து வரப்பட்ட கூலிப் படைகளையும் லேடன் இந்த நகரில் தான் நிறுத்தியிருந்தார்.
இதனால் தான் நாட்டின் பெரும் பகுதியைப் பிடித்துவிட்டாலும் கூட நார்த்தர்ன் அலையன்சிடம் குண்டூஸ் இன்னும்சிக்கவில்லை. அங்குள்ள பின்லேடன் ஆதரவு வீரர்கள் கடும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது தவிரசரணடைய நினைக்கும் தலிபான் வீரர்களையும் சுட்டும், வெட்டியும் கொன்று குவித்து வருகின்றனர்.
இந் நிலையில் இந் நகரின் கமாண்டரான நாமாங்கனி கொல்லப்பட்டது பின் லேடனுக்கு கிடைத்த மிகப் பெரியஅடியாகக் கருதப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications