இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு:
இன்று (திங்கள்கிழமை) காலை காஷ்மீர் எல்லைப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற இரு தீவிரவாதிகளை எல்லைப்பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
அப்பகுதியில் அவர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சில தீவிரவாதிகள் இந்திய எல்லைப்பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர்.
உடனே எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். தீவிரவாதிகளும்பதிலுக்குச் சுட்டனர்.
இச்சம்பவத்தில் இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் திரும்பி ஓடிவிட்டனர்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து ஏ.கே. ரக துப்பாக்கி ஒன்றும், நான்கு கையெறி கிரினேட் குண்டுகளும்,இரண்டு பத்திரிக்கைகளும் கைப்பற்றப்பட்டன.
லஷ்கார் தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ராணுவம்
இதற்கிடையே நேற்று திடீர்த் தாக்குதல் நடத்தி 10 ராணுவ வீரர்கள் உள்பட 13 பேரைக் கொன்ற தீவிரவாதிகளைராணுவத்தினர் தேடி வருகின்றனர்.
விடுமுறைக்காக ஸ்ரீநகரிலிருந்து ஜம்முவுக்கு ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்தபோதுதான் தீவிரவாதிகள்இந்தத் திடீர்த் தாக்குதலை நடத்தினர். குறைந்தது மூன்று பேராவது இத்தாக்குதலில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்றுராணுவத்தினர் கருதுகின்றனர்.
லஷ்கர்-ஏ-தொய்பா என்ற தீவிரவாத அமைப்பு இச்சம்பவத்திற்குப் பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் நடத்தியதீவிரவாதிகளை ரம்பான் பகுதியில் ராணுவத்தினர் முழு வீச்சில் தேடி வருகின்றனர்.
கடந்த ஒரு ஆண்டில், நெடுஞ்சாலையில் வைத்து ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் தாக்குவது இது ஆறாவது முறைஎன்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications