பொய் வழக்கு போடுவதாக பஸ் ஊழியர்கள் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பல போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மீது போலீசார் தொடர்ந்துள்ளபொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இது தொடர்பாக சி.ஐ.டி.யூ. சங்கத் தலைவர் ஏ. செளந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:

சுமார் 18000 போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் அங்குஇருப்பதற்கான போதிய இட வசதி இல்லை.

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், அவர்களைப் பழிவாங்கும் விதமாக, பலஊழியர்கள் மீது அரசு பொய் வழக்குகளைத் தொடர்ந்துள்ளது.

இவற்றை அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். மேலும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பல பேர் தனிசெல்களுக்குள் அடைக்கப்பட்டு, துன்புறுத்தப்படுகின்றனர்.

இவற்றைத் தடுப்பதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபடாவிட்டால், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சிறையிலேயேஅறப்போரில் ஈடுபடுவார்கள். உண்ணாவிரதமும் இருப்பார்கள்.

23ம் தேதி நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தத்தைத் தடுத்து நிறுத்த அரசு முயற்சி செய்கிறது. ஆனால்திட்டமிட்டபடி பொது வேலை நிறுத்தம் கட்டாயம் நடந்தே தீரும் என்றார் செளந்தரராஜன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+