பொடோ சட்டத்துக்கு 9 தமிழக கட்சிகள் எதிர்ப்பு
சென்னை:
தீவிரவாதத்துக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள பொடோ சட்டத்தை தமிழகத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள்உள்ளிட்ட 9 கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. இந்தச் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் எனவும்அவை கோரிக்கை விடுத்துள்ளன.
இந்தச் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று கூறி காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவும் எதிர்ப்புத்தெரிவித்துள்ளதால், நாடாளுமன்றத்தில் இது தொடர்பான மசோதாவை பா.ஜ.க. அரசு நிறைவேற்ற முடியாதுஎன்றே கருதப்படுகிறது.
ராஜ்யசபாவில் காங்கிரஸ் தான் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. அங்கு பா.ஜ.க. கூட்டணிக்கு தீர்மானங்கள்,சட்டங்களை நிறைவேற்றும் அளவுக்கு பலம் இல்லை.
இந் நிலையில் பொடோ சட்டத்துக்கு எதிரான கட்சிகளின் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. இதில் காங்கிரஸ்தலைவர் இளங்கோவன், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் இதயவண்ணன், இந்திய குடியரசுக் கட்சியின்தலைவர் குமார், அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் சந்தானம், திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர்பூங்குன்றன், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நல்லகண்ணு ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இந்தச் சட்டம் மக்களை மதத்தின் அடிப்படையில் பிரித்துவிடும்.அதே போல எதிர்க் கட்சிகளின் கருத்தை ஒழித்துக் கட்டவும் இச் சட்டம் உதவும்.
இந்தச் சட்டத்தை எதிர்த்து மாவட்டத் தலைநகர்களில் வரும் 27ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கும். அன்றைய தினம்மீண்டும் நாங்கள் அனைவரும் கூடி ஆலோசனையும் நடத்துவோம் என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
பா.ஜ.க. கூட்டணியில் இருந்தாலும் கூட இந்தச் சட்டத்தை திமுகவும் எதிர்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications