வீரப்பனிடமிருந்து மனைவிக்கு வந்த பல கோடிகள்
சேலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமிக்கு வீரப்பனிடமிருந்து ஏராளமான பணம் வந்துள்ளதாகஅதிரடிப் படையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும், தன்னுடைய கூட்டாளியான சேத்துக்குளி கோவிந்தனின்வீட்டுக்கும் ஏராளமான பணத்தை வீரப்பன் அனுப்பி வைத்துள்ளான்.
கடந்த ஆண்டு நடிகர் ராஜ்குமாரை வீரப்பனிடமிருந்து மீட்பதற்காகக் தமிழக-கர்நாடக அரசுகள் பெரும் பணம்கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட தமிழர் விடுதலைப் படை தலைவர் மாறன், தமிழக அரசிடமிருந்து கைமாறிய 20 கோடிரூபாயை வீரப்பன் காட்டுப் பகுதிக்குள் புதைத்து வைத்திருப்பதாகக் கூறியதையடுத்து, இவ்விவகாரம் பூதாகரமாககிளம்பியது.
பின்னர் இந்தப் பணத்தை வீரப்பன் தனது குடும்பத்தினருக்கும், சேத்துக்குளியான் குடும்பத்துக்கும் அனுப்பியதாகத்தெரிகிறது. இது தொடர்பாக சேத்துக்குளி கோவிந்தனின் அண்ணன் மாதையனின் மனைவி அமராவதி,அவருடைய தங்கை பார்வதியின் கணவர் அய்யாத்துரை ஆகியோர் ஏற்கனவே போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ரூ.3.5 லட்சம் பணத்தையும், 7 பவுன் தங்க நகைகளையும் போலீசார் மீட்டனர். நடிகர்ராஜ்குமாரை விடுவிப்பதற்காக தமிழக அரசு கொடுத்த பணம்தான் இது என்று விசாரணையின் போதுகைதானவர்கள் கூறினார்கள்.
இதையடுத்து, கொளத்தூர் போலீசாரும் அதிரடிப் படையினரும் தீவிர அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
இதன் விளைவாக வீரப்பனின் தங்கை முனியம்மாளும், மாதையனும் இரு நாட்களுக்கு முன் கைதுசெய்யப்பட்டனர்.
தொடர்ந்து வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியிடமும் அதிரடிப் படையினர் விசாரணை நடத்தினர். அதிரடிப் படைமுகாமில் வைத்து அவரிடம் விசாரணை நடந்தது. இட்லிக் கடை வைத்துப் பிழைத்து வந்த முத்துலட்சுமியிடம்சமீபகாலமாக ஏராளமாக பணம் புழங்குவது குறித்து அதிரடிப் படையினர் விசாரித்தனர்.
பின்னர் எப்போது விசாரணைக்குக் கூப்பிட்டாலும் வர வேண்டும் என உத்தரவுடன் அவரை விடுவித்தனர்.
ஆனால், விசாரணையில் சிக்கி முடிவில் கைதாகக் கூட வாய்ப்புள்ளது என்று அஞ்சும் முத்துலட்சுமி. வீரப்பனின்தம்பி அர்ஜுனின் மனைவி தங்கம்மாளும் மேட்டூரிலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திடீரென்றுதலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
வீரப்பனிடமிருந்து பணம் கைமாறிய விவகாரத்தில் இடைத்தரகராகச் செயல்பட்ட முனுசாமி என்பவருக்கும்போலீசார் வலை விரித்துள்ளனர்.
வீரப்பனின் தீவிர ஆதரவாளரான முனுசாமி பிடிபட்டால், அரசிடமிருந்து கைமாறிய தொகை யார் யாருக்கெல்லாம்"பட்டுவாடா" செய்யப்பட்டது என்பது வெளிச்சத்துக்கு வரும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications