பெண்ணின் பிணத்தை வைத்து பணம் கேட்டு மிரட்டிய கும்பல்
உசிலம்பட்டி:
பெண்ணின் பிணத்தை வைத்துக் கொண்டு பணம் கேட்டு போராட்டம் நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கருக்காட்டான்பட்டியில் காமராஜ் என்பவர் வீடு கட்டி வந்தார். இந்தக் கட்டடவேலையில் பாக்கியம், சகுந்தலா, காசிமாயன் ஆகிய மூன்று பேர் ஈடுபட்டிருந்தனர்.
சுவர் கட்டிக் கொண்டிருக்கும்போது அது திடீரென இடிந்து விழுந்தது. இதில் பாக்கியம் படுகாயமடைந்து மதுரைஅரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இதையடுத்து பாக்கியத்தின் உடலுடன் உசிலம்பட்டி திரும்பிய இவரது உறவினர்கள் நேராக காமராஜிடம் சென்றுநஷ்ட ஈடு கேட்டனர். அவர், உடனடியாக இறுதிச் சடங்குக்காக ரூ. 5,000 தர ஒப்புக் கொண்டார். பின்னால்கொஞ்சம் பணம் கொடுப்பதாகவும் உறுதியளித்தார்.
ஆனால், இரண்டரை லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று பாக்கியத்தின் உறவினர்கள் மிரட்டினர். பணம் தரகாமராஜ் மறுத்ததால் அவரது கட்டடத்துக்குள் பாக்கியத்தின் உடலைப் போட்டது அந்தக் கும்பல். மேலும் அந்தகட்டடத்திலேயே உடலைப் புதைப்போம் எனவும் மிரட்டியது அந்த பணம் பறிக்கும் கும்பல்.
இதையடுத்து காமராஜ் போலீசில் புகார் செய்தார். விரைந்து வந்து போலீசார் அந்தக் உடனே கைது செய்யாமல்சமாதானம் பேசினர். ஆனால் அவர்கள் போலீசாரையும் சேர்த்து மிரட்டவே உடனடியாக அந்தக் கும்பலைச் சேர்ந்தபெருமாள், தர்மர், கருப்பைய்யா, சின்னச்சாமி ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.
இவர்களுக்கு உதவிய வக்கீல் முருகபாண்டி, மாதரை என்ற பாண்டி, வேலு ஆகிய நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
உடலும் போலீஸ் பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications