அடுத்த ஆட்சி: பெர்லினில் ஆப்கான் குழுக்களின் கூட்டம்
ஐக்கிய நாடுகள் சபை:
ஆப்கானிஸ்தானில் அடுத்த ஆட்சி அமைப்பது குறித்து அந் நாட்டின் பல்வேறு இனத்தினரைச் சேர்ந்ததலைவர்களின் கூட்டத்தை வரும் சனிக்கிழமை பெர்லினில் நடத்த ஐக்கிய நாடுகள் சபை திட்டமிட்டுள்ளது.
ஒசாமாவை மக்கள் காட்டிக் கொடுப்பார்கள்:
ஒசாமா பின் லேடனைப் பிடிக்க உதவுபவர்களுக்கு 25 மில்லியன் டாலர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதால், அவரைஆப்கானிஸ்தான் மக்களே விரைவில் காட்டிக் கொடுப்பார்கள் என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட்ரம்ஸ்பீல்ட் கூறினார்.
பின்லேடனைப் பிடிக்க விரைவில் பெரும் எண்ணிக்கையிலான ஆப்கானிஸ்தான் மக்களே குகைகளிலும்,சுரங்கங்களிலும் நுழைவார்கள்.
அதே போல தலிபான் தலைவர் முல்லா ஒமரையும் விடமாட்டோம். காண்டஹாரையோ, குண்டூஸ் நகரையோஅவருக்கு வேண்டியவர்களிடம் ஒப்படைத்துவிட்டுத் தப்பிவிட ஒமர் கருதுகிறார். அவரை தப்ப விட மாட்டோம்.
ஆப்ானிஸ்தானுக்குள் 700 அமெரிக்கப் படைகள் இயங்கி வருகின்றன. மேலும் பல கமாண்டோக்கள் பின்லேடனைப் பிடிக்க அனுப்பப்பட உள்ளனர் என்றார்.
தொடர்கிறது விமானத் தாக்குதல்:
இதற்கிடையே தலிபான்கள், அல்-காய்தா தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள குண்டூஸ், காண்டஹார் நகரங்கள்மீது அமெரிக்க விமானங்கள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றன.
அமெரிக்கா-இங்கிலாந்து மோதல்:
ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளுக்கும் இங்கிலாந்துப் படைகளுக்கும் இடையேமோதல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கப் படைகள் பின் லேடனைப் பிடிப்பதில் தான் தீவிரம் காட்டி வருகின்றன. வேறு எதைப் பற்றியும்கவலைப்படவில்லை. ஆனால், இங்கிலாந்துப் படைகள் நாட்டில் அமைதியை ஏற்படுத்தவும் உதவிப் பணிகளுக்கும்தான் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
அமெரிக்கப் படைகளின் இந்த சுயநலப் போக்கைக் கண்டு இங்கிலாந்துப் படைகள் வெறுத்துப் போய் உள்ளதாகஇங்கிலாந்து பத்திரிக்கைகள் கூறியுள்ளன. அந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து அமெரிக்காவுக்குகொஞ்சம் கூட கவலையில்லை, பின் லேடன் கிடைத்தால் போதும் என்ற மன நிலையில் தான் அமெரிக்கப் படைகள்உள்ளன என்று அந்தப் பத்திரிக்கைகள் கூறுகின்றன.
தீவிரவாதிகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு எச்சரிக்கை:
தீவிரவாதிகளை இராக் உள்பட எந்த நாடு ஆதரித்தாலும் தாக்குவோம் என அமெரிக்க பாதுகாப்புத்துறை துணைஅமைச்சர் பெளல் வோல்போவிட்ஸ் கூறினார்.
ஆப்கானிஸ்தானோடு எங்களை நிறுத்திக் கொள்ள மாட்டோம். தீவிரவாதிகளை யார் ஆதரித்தாலும் நடவடிக்கைஎடுப்போம். அல்-காய்தாவுக்கு 60 நாடுகளில் கிளைகள் உள்ளதைக் கண்டுபிடித்துள்ளோம்.
இறந்துகிடந்த 4 நிருபர்கள்:
காபூலுக்குள் நுழைய முயன்று காணாமல் போன 4 நிருபர்களின் உடல்கள் ரோட்டோரத்தில் கிடந்தன. இதில் ஒருவர்ரோம் நாட்டைச் சேர்ந்த பெண். இருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர்ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நிருபர்.
இவர்களை 60 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் தான் கடத்திக் கொன்றதாக நங்கார்கர் மாகாண கவர்னர் ஹாஜிஅப்துல் காதிர் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications