இந்தியா தயாரித்த ஹெலிகாப்டர் தோல்வி
டெல்லி:
இந்தியா வடிவமைத்துள்ள அட்வான்ஸ் லைட் ஹெலிகாப்டர் மிக உயரமான இடங்களில் பறக்க இயலாமல்தடுமாறி தோல்வியடைந்துவிட்டது.
இந்த ஹெலிகாப்டரை பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் வடிவமைத்துத்தயாரித்துள்ளது. ஆனால், இதன் மாதிரிகளை (புரோட்டேடைப்) இயக்கிப் பார்த்த ராணுவம்திருப்தியடையவில்லை.
இந்த ஹெலிகாப்டர் மிக அதிகமான உயரங்களில் தடுமாறுகிறது. இந்த உயரத்தில் பறக்க போதிய சக்தியில்லாமல்திணறகிறது. இதை வைத்துக் கொண்டு பாதுகாப்புப் பணிகளிலும், தாக்குதல்களிலும் இறங்க முடியாது என இந்தியராணுவம் கூறிவிட்டது.
இந்த ஹெலிகாப்டரை தரம் உயர்த்தினால் தான் பயன்படுத்த இயலும்.
மேலும் வானில் 10 நிமிடங்கள் வரை ஒரே இடத்தில் நிற்கும் திறனும் இந்த ஹெலிகாப்டரில் இருந்திருக்கவேண்டும். ஆனால், 3 நிமிடங்கள் மட்டுமே இந்த ஹெலிகாப்டரால் பறந்தவண்ணம் நிற்க முடிகிறது. இதனால்மீட்புப் பணிகள் போன்ற நடவடிக்கைளில் இதை வைத்துக் கொண்டு ஈடுபட முடியாது.
அதே நேரத்தில் ராணுவத்தில் ஹெலிகாப்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருக்கும் ஹெலிகாப்டர்களைவைத்துக் கொண்டு நீண்ட நாள் சமாளிக்க முடியாது என்பதால் உடனடியாக மிக உயரத்தில் பறக்கும் சக்தி கொண்ட30 ஹெலிகாப்டர்களை வாங்குமாறு பாதுகாப்பு அமைச்சகத்திடம் ராணுவம் வலியுறுத்தியுள்ளது.
ஏ.எல்.எச். என்று அழைக்கப்படும் அட்வான்ஸ்ட் லைட் ஹெலிகாப்டர் ஒவ்வொன்றும் 4.5 மில்லியன் டாலர்மதிப்புள்ளது. இந்த ரகத்தைச் சேர்ந்த 300 ஹெலிகாப்டகளைத் தயாரிக்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்திட்டமிட்டுள்ளது. கடந்த 1998ம் ஆண்டிலேயே தயாரிப்புப் பணிகள் ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், திட்டம்2005ம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications