முன் ஜாமீன் கோரும் சரவண பவன் அதிபர்
சென்னை:
திருமணமான இளம்பெண்ணை மிரட்டித் திருமணம் செய்யமுயன்ற ஹோட்டல் சரவணபவன் அதிபர் ராஜகோபால்தனக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
சென்னையில் பிரபலமான சரவணபவன் என்ற பெயரில் ஹோட்டல்களை நடத்தி வருபர் ராஜகோபால். இவர் மீதுஜீவஜோதி என்ற இளம் பெண் போலீசில் புகார் கொடுத்தார். இவர் ஏற்கனவே திருமணமானவர். இவரது கணவர்பெயர் பிரின்ஸ் சாந்தகுமார்.
ஜீவஜோதி போலீசில் கொடுத்த புகாரில், கணவரை விரட்டி விட்டுவிட்டு தன்னிடம் வந்துவிடுமாறு சரவண பவன்அதிபர் ராஜகோபால் என்னை மிரட்டி வருகிறார். என்னை மூன்றாவது திருமணம் செய்து கொள்வதாகவும்கூறுகிறார் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து போலீசார் சரவணபவன் ஊழியர்கள் 5 பேரைக் கைது செய்தனர். ஆனால், ராஜகோபால்தலைமறைவாகிவிட்டார். இவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். எனவே, தூத்துக்குடியிலும் இவரைப் போலீசார்தேடுகின்றனர்.
இந் நிலையில் தனக்கு இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜகோபால் தாக்கல்செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
எனது ஹோட்டலில் உதவி மேனேஜராகப் பணியாற்றி வந்த ராமசாமி தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டுவெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். அவரது மகள் தான் ஜீவஜோதி.
ஜீவஜோதியும் அவரது அம்மாவும் என்னிடம் வந்து தாங்கள் நடத்திவந்த டிராவல்சில் நஷ்டம்ஏற்பட்டுவிட்டதாகவும், அதனை ஈடுகட்ட கடன் கொடுக்குமாறும் கேட்டனர். நானும் கடன் கொடுத்தேன்.
பிறகு சில நாட்கள் கழித்து மீண்டும் ஒரு பெரிய தொகையை என்னிடம் கடனாகக் கேட்டனர். நான் தரமறுத்துவிட்டதால் என்மீது ஆத்திரம் அடைந்து இவ்வாறு பொய் புகார் தந்துள்ளனர்.
நான் குற்றமற்றவன் என் மீது பொய்யாகப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே எனக்கு இந்த வழக்கில்முன்ஜாமீன் வழங்க வேண்டும்.
இவ்வாறு தனது மனுவில் ராஜகோபால் கூறியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications