பான் மசாலா, குட்கா விற்றால் 6 மாதம் சிறை; 1000 ரூபாய் அபராதம்
சென்னை:
தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா ஆகியவற்றைக் கடைகளில் விற்பனை செய்பவர்களுக்குஆறு மாதம் சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் செம்மலை வெளியிட்டுள்ள அறிக்கை:
நம் நாட்டில் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களில் மூன்றில் ஒரு பாகத்தினர் பான் மசாலாவைப்பயன்படுத்தியவர்கள் ஆவர்.
புகையிலை சேர்க்கப்பட்ட பான் மசாலாவை ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால்வாயைத் திறக்க முடியாத நிலைக்குப் படிப்படியாகச் சென்று விடுவார்கள் என்று ஹைதராபாத் தேசிய ஊட்டச்சத்துஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
எனவே பொதுமக்களின் உடல்நலத்தை, குறிப்பாக, இப்பழக்கத்துக்கு ஆளாகியுள்ள இளைஞர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் பொருட்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
புகையிலை மற்றும் புகையிலை சேர்க்கப்பட்ட பான் மசாலா, குட்கா ஆகியவை எந்தப் பெயரில்விநியோகிக்கப்பட்டாலும் அவற்றைச் சேகரித்து வைத்தாலும் அது சட்டப்படி குற்றமாகும்.
இத்தடையை மீறுபவர்களுக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை வழங்கப்படும். மேலும் ரூ.1000 அபராதம்விதிக்கப்படும் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் அமைச்சர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications