தீவிரவாத சட்டம்: எங்கள் கருத்துக்கு வாஜ்பாய் ஆதரவு- கருணாநிதி
சென்னை:
பொடோ சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்ற திமுகவின் கருத்தை வாஜ்பாய் ஏற்றுக்கொண்டுள்ளார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இதுகுறித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஒத்தி வைத்ததன் மூலம் பொடோ சட்டம் குறித்து பிரதமர் வாஜ்பாய் அவசரம்காட்டவில்லை என்பதை நிரூபித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கட்சிக் கூட்டத்தின் முடிவில் எந்த வித முடிவும் எட்டப்படவில்லை.இருந்தாலும் பொடோ சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்ற திமுகவின் கருத்தை வாஜ்பாய்ஏற்றுக் கொண்டதாகத்தான் தெரிகிறது.
பொடோ சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதையும் நேற்றைய கூட்டத்தில் திமுக வலியுறுத்தியது.மேலும் பொடோ சட்டம் குறித்த திமுகவின் நிலையை பிரதமருக்கு ஏற்கனவே தெரியப்படுத்தி உள்ளோம்.
பொடோ சட்டத்துக்கு அதிமுகவும் ஆதரவளிப்பதை வைத்து, அக்கட்சி பாஜகவுடன் நெருங்கியுள்ளது என்றுஎண்ணிவிடக் கூடாது. ஆனால் பத்திரிக்கைகள் தொடர்ந்து இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதால் மக்களிடம்குழப்பம்தான் ஏற்படும் என்றார் கருணாநிதி.
முந்தைய திமுக ஆட்சி பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்தது என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதைவைத்து, தமிழக அரசு பொடோ சட்டத்தைப் பயன்படுத்தி உங்கள் மீது நடவடிக்கை எடுக்குமா என்றுகருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர், "நான் மிசாவையே சந்தித்தவன். இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன்" என்று பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications