பொடோ சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகளுக்குத் தடை
டெல்லி:
பெடோ சட்டத்தின் கீழ் எல்.டி.டி.ஈ. உளபட 23 இயக்கங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகள் விவரம்:
லக்ஷர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகம்மத், தீன்தார் அன்சுமான், பப்பர் கல்சா இன்டர்நேஷனல், காலிஸ்தான்கமாண்டோ போர்ஸ், ஹர்கத்-உல்-முஜாகிதீன், உல்பா, சிமி (இஸ்லாமிய மாணவர் இயக்கம்) உள்பட பலவட-கிழக்கு மாநில தீவிரவாத அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.
இத் தகவலை மத்திய உள்துறை இணையமைச்சர் ஐ.டி.சாமி நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
அனைத்துக் கட்சிக் கூட்டம்:
இந் நிலையில் பொடோ சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளின் ஆதரவைப் பெறமத்திய அரசு முயன்று வருகிறது. இதற்கு பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள் தவிர கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதனால், இச் சட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்த சிக்கலைத் தீர்க்க அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட
பிரதமர் வாஜ்பாய் திட்டமிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications