நெடுமாறனுக்கும் வீரப்பன் பணம் கொடுத்தானா? - அதிரடிப்படை சந்தேகம்
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக அரசு சார்பில் வீரப்பனுக்கு கொடுக்கப்பட்ட பணத்தில் தமிழர் தேசியஇயக்கததின் தலைவர் நெடுமாறனுக்கும் ரூ.1 கோடி வரை கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று அதிரடிப்படையினர்சந்தேகிக்கின்றனர்.
கடந்த ஆண் சந்தனக் கடத்தல் வீரப்பன், கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்திச் சென்று காட்டுக்குள்வைத்திருந்தான். அவரை மீட்பதற்காக முதலில் நக்கீரன் ஆசிரியர் கோபால் பலமுறை காட்டுக்குள் சென்று வந்தார்.ஆனால் மீட்கமுடியவில்லை.
இதனால் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தனது குழுவினருடன் ராஜ்குமாரை மீட்க காட்டுக்குள்சென்றார்.
அப்போது அரசு சார்பில் ரூ.20 கோடி வரை வீரப்பனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதை சமீபத்தில் வீரப்பனுடன்காட்டுக்குள் திரிந்து கைதான தமிழர் விடுதலைப் படைத் தலைவர் மாறன் அதிரடிப்படை போலீசாரிடம்கூறியபோதுதான் அனைவருக்கும் தெரிந்தது.
அரசு கொடுத்த ரூ.20 கோடி ரூபாயை வீரப்பன் காட்டுப் பகுதிகளுக்குள் புதைத்து வைத்திருப்பதாக மாறன்கூறினார்.
தற்போது அந்தப் பணத்தில் வீரப்பன் தன் மனைவி மற்றும் அவனது கூட்டாளியான சேத்துக்குளி கோவிந்தனின்உறவிணர்கள் ஆகியோருக்கு கொடுத்திருப்பதாக அதிரடிப்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சேத்துக்குளி கோவிந்தனின் அண்ணன் மாதையனின் மனைவி அமராவதி, அவரது தங்கைபார்வதியின் கணவர் அய்யாத்துரை ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்துரூ.3.5 லட்சம் பணமும், 7 பவுன் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடைய வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தலைமறைவாகி விட்டார்.
அந்தப் பணம் முழுவதும் அரசு சார்பில் வீரப்பனுக்கு கொடுக்கப்பட்ட பணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து அதிரடிப்படை அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் வீரப்பனுக்கு கைம்மாறிய பணத்தில் நெடுமாறனுக்கு கட்சி நிதியாக ரூ.1 கோடி வரை வீரப்பன்சார்பில் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இதற்கான ஆதாரங்கள் அதிரடிப்படைப்போலீசார் வசம் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே நடிகர் ராஜ்குமார் மீட்புக்குழுவில் இடம்பெற்ற முக்கியப்புள்ளிகள் விரைவில் அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications