மாநிலம் முழுவதும் சோதனை: ரூ. 1 கோடி மதிப்பு குட்கா பறிமுதல்
தஞ்சாவூர்:
தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான கடைகளில் சோதனை நடத்திய நலத்துறை அதிகாரிகள் ரூ. 1 கோடிமதிப்புள்ள பான் மசாலா, பான் பராக், மாணிக்சந்த் போன்ற குட்கா அடங்கிய பொருள்களை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் இந்தப் பொருள்களுக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டது. இதனை விற்கவும், பதுக்கி வைக்கவும்தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் பல கடைகளில் தொடர்ந்து இந்தப் பொருள்களின் விற்பனை நடந்து வருகிறது.
தஞ்சாவூரில் பஸ் ஸ்டாண்ட், கல்லூரிப் பகுதிகள், கிழக்கு வாசல் ஆகிய இடங்களில் பல கடைகளில் மாவட்டஆட்சியரின் உத்தரவின் பேரில் சோதனை நடந்தது. இதில் 8,000 கிராம் எடையுள்ள குட்கா பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 5 லட்சம்.
அதே போல திருநெல்வேலியிலும் நலத்துறை அதிகாரிகள் கடைகளில் சோதனை நடத்தி இநதப் பொருள்களைப்பறிமுதல் செய்தனர். அப்போது கடைக்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதமும் தகராறும்மூண்டது.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருந்தாலும் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி மாணிக்சந்த்பாக்கெட்களைக் கைப்பற்றினர்.
கோவையில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதலானது.
இது குறித்து மாநில நலத்துறை இயக்குனர் டாக்டர் பி.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,
இப்போதைக்கு இந்தப் பொருள்களின் ஸ்டாக்கிஸ்டுகளிடம் தான் சோதனை நடந்து வருகிறது. இன்னும் ஒருவாரத்துக்கு அவர்கள் மீது வழக்கு ஏதும் போடப்படாது. ஆனால், தொடர்ந்து இதை அவர்கள் விற்றால் வழக்குத்தொடரப்படும்.
தடையுத்தரவு திடீரென அறிவிக்கப்பட்டதால் தாங்கள் ஏற்கனவே வாங்கிய இந்தப் பொருள்களை திருப்பிஒப்படைக்க கால அவகாசமே கிடைக்கவில்லை என்று ஸ்டாக்கிஸ்டுகள் கூறியுள்ளனர். இதனால் பெரும் அளவில்நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்காகத் தான் அவர்களுக்கு ஒரு வாரம் அவகாசம்தரப்படுகிறது.
சிறிய கடைக்காரர்கள் உடனடியாக இந்தப் பொருள்களை ஸ்டாக்கிஸ்டுகளிடம் தந்துவிட வேண்டும்.ஸ்டாக்கிஸ்டுகள் இதை உடனடியாக மாநிலத்தை விட்டு வெளியே கொண்டு சென்றுவிட வேண்டும் என்றுஅறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications