பெர்னாண்டஸ் விவகாரம்: லோக் சபா ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பாதுகாப்புத் துறை அமைச்சராக ஜார்ஜ் பெர்னாண்டஸ் மீண்டும் நியமிக்கப்பட்டதை எதிர்த்து லோக் சபாவில்எதிர்க்கட்சிகள் இன்று (வியாழக்கிழமை) பெரும் அமளியில் ஈடுபட்டதால், 3 மணி நேரத்துக்கு லோக் சபாஒத்திவைக்கப்பட்டது.

இன்று காலை லோக் சபாவில் கேள்வி நேரம் ஆரம்பித்ததும், மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் பிரபோத் பாண்டாவைஅழைத்துப் கேள்விகளைக் கேட்கச் சொன்னார் சபாநாயகர் பாலயோகி.

ஆனால், சட்டத்தை மீறி அமைச்சர் பதவியில் பெர்னாண்டஸ் அமர்ந்திருக்கும்போது நான் கேள்வி எதுவும் கேட்கவிரும்பவில்லை என்று பாண்டா கூறினார். இதையடுத்து காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா உள்ளிட்ட அனைத்துஎதிர்க்கட்சிகளும் அவருடன் சேர்ந்து கொண்டனர்.

தெஹல்கா ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட பெர்னாண்டஸ், இதை விசாரித்து வரும் வெங்கடசாமி கமிஷனின்அறிக்கை வருவதற்குள்ளாகவே ஏன் மீண்டும் அமைச்சர் பதவியில் நியமிக்கப்பட்டார் என்று சராமாரியாகக்கேள்விகளை எழுப்பினர்.

தொடர்ந்து, அமைச்சர் பதவியிலிருந்து பெர்னாண்டசை நீக்க வேண்டும் என்று எதிர்க் கட்சியினர் கோஷம் போடஆரம்பித்தனர்.

அவர்களை அமைதியாக இருக்குமாறு பாலயோகி தொடர்ந்து கேட்டுக் கொண்ட போதும், எதிர்க்கட்சியினர்தொடர்ந்து கோஷங்களை எழுப்பிக் கொண்டே இருந்தனர்.

மற்றவர்கள் கேள்வி கேட்பதையும் அவர்கள் தடுத்தனர். இதனால் லோக் சபாவில் பெரும் அமளி ஏற்பட்டது.

இதையடுத்து, பிற்பகல் 02.00 மணி வரை லோக் சபாவை ஒத்திவைத்தார் சபாநாயகர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+