10,000 தலிபான்கள் சரண்: முக்கிய நகரை இழக்கின்றனர்
குண்டூஸ்:
வடக்கு ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரில் சுற்றி வளைக்கப்பட்டுள்ள தலிபான், பாகிஸ்தான், செசன்யா,அரேபிய நாட்டுத் தீவிரவாதிகளில் 10,000 தலிபான்கள் மட்டும் சரணடைய ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்துஅந்த நகரத்தை நார்த்தர்ன் அயைன்ஸ் கைப்பற்றவுள்ளது.
நார்த்தர்ன் அலையன்ஸ் படையின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அப்துல் ரஷீத் தோஸ்தமும் தலிபான்களின்குண்டூஸ் நகர கமாண்டர் முல்லா முகம்மத் பாஸிலும் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
இதையடுத்து எந்தவிதமான தாக்குதலும் நடத்தாமலேயே குண்டூஸ் நகரை அப்துல் ரஷீத் தோஸ்தம்தலைமையிலான படையினர் கைப்பற்றுவர் என நார்த்தர்ன் அலையன்ஸ் கூறியுள்ளது.
ஆனால், தலிபான்கள் சரணடைவதற்கான வரைமுறைகள் குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை. ஆயுதங்களைகீழே போட்டுவிட்டு வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
குண்டூஸ் நகரில் சரணடையும் தலிபான்களில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களை மட்டுமே உயிருடன்விடுவோம் எனவும் பாகிஸ்தான், அரேபியா, செசன்யா நாட்டினரை கொன்று குவிப்போம் எனவும் ஏற்கனவேதோஸ்தம் தெரிவித்துள்ளார். இவர்களின் எண்ணிக்கை 6,000 வரை இருக்கும் என்று தெரிகிறது.
இன்று காலை வரை குண்டூஸ் நகரை ஒப்படைத்துவிடுமாறு தலிபான்களுக்கு தோஸ்தம் கெடு விதித்திருந்தநிலையில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நார்த்தர்ன் அலையன்ஸ் கமாண்டர் மெஹ்மூத் சப்தர் கூறுகையில், 97 சதவீத தலிபான்கள சரணடையஒப்புக் கொண்டுவிட்டனர். ஆனால், பின் லேடனின் அரேபிய,செசன்ய தீவிரவாதிகளும், ஐ.எஸ்.ஐ. அனுப்பியபாகிஸ்தான் தீவிரவாதிகளும் தான் சரணடைய மறுத்து வருகின்றனர். அவர்களை சுட்டுத் தள்ளுவோம்.
எப்படியிருந்தாலும் இன்று குண்டூஸ் நகருக்குள் நுழையுப் போகிறோம்.
ஜெனரல் நசீர் மெக்மூத் எங்கள் படைகளை தலைமை தாங்கிச் செல்வார் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications