காஷ்மீரில் நடப்பது தீவிரவாதம் அல்ல.. பாக். திமிர் பேச்சு
இஸ்லாமாபாத்:
தீவிரவாதம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விவாதிக்கும்போது காஷ்மீர் போன்ற இடங்களில் நடக்கும் சுதந்திரப்போராட்டத்தைஅதிலிருந்து பிரித்து தனியே பார்க்க வேண்டும் என பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந் நிலையில் பாகிஸ்தான் வந்துள்ள பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாக்ஸ்ட்ரா பாகிஸ்தான் அதிபர்முஷாரப் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தார் ஆகியோருடன் பேச்சு நடத்தினார்.
பேச்சுவார்த்தையின் முடிவில் அப்துல் சத்தாரும், ஸ்ட்ராவும் இன்று இஸ்லாமாபாத்தில் கூட்டாக நிருபர்களுக்குப்பேட்டியளித்தனர். அப்போது அப்துல் சத்தார் கூறுகையில்,
எது தீவிரவாதம் என்பது பற்றி ஒரு முழுமையான விளக்கத்தை உலக நாடுகளுக்கு அளிப்பதற்காக ஐக்கிய நாடுகள்சபையில் தற்போது ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
விடுதலைப் போராட்டத்திற்கும், தீவிரவாதத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று இஸ்லாமிய நாடுகளின்மாநாட்டில் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த முடிவைப் பாகிஸ்தான் ஆதரிக்கிறது.
ஆனால் என்னைப் பொறுத்தவரை இது குறித்து முடிவெடுக்கும் பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபையிடம்விட்டுவிடுவது தான் நல்லது.
ஐக்கிய நாடுகள் சபை தீவிரவாதம் குறித்து விளக்கும் போது காஷ்மீரில் நடைபெற்று வரும் போராட்டத்தை அதில்சேர்த்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் போது காஷ்மீர் பற்றிப் பேச எங்களுக்குப் போதிய நேரம் கிடைக்க வில்லைஎன்றார்.
இதுகுறித்து ஜாக் ஸ்ட்ரா கூறுகையில்,
பாகிஸ்தானின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும், அதன் அண்டை நாடுகளுடன் உள்ள தொடர்புகள் பற்றியும்நாங்கள் பேசினோம்.
மேலும் நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் நடைபெறவுள்ள "சார்க்" மாநாட்டின் போது அதிபர் முஷாரப்பும்,இந்தியப் பிரதமர் வாஜ்பாயும் சந்தித்துப் பேசுவது குறித்தும் நாங்கள் ஆலோசித்தோம் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications