பந்த் வெற்றி- தொழிலாளர்கள், பெரும் தோல்வி- முதல்வர்
சென்னை:
தமிழகத்தில் பஸ் போக்குவரத்துத் தொழிலாளர்கள் நேற்று நடத்திய பந்த்தினால் மாமூல் வாழ்க்கைபாதிக்கப்படவில்லை.
ஆனால், பந்த் வெற்றி பெற்றதாக தொழிற் சங்கங்களும், தோல்வியடைந்ததாக முதல்வர் பன்னீர்செல்வமும்கூறியுள்ளனர்.
20 சதவீத போனஸ் கேட்டு நடத்தப்பட்ட இந்த பஸ்சுக்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், பா.ம.க., மதிமுகஆகியவை ஆதரவு தெரிவித்திருந்தன. பல ஆட்டோ சங்கங்களும் இதங்கு ஆதரவு தெரிவித்தன.
ஆனால், பந்துக்கு முதல் நாள் பஸ் போக்குவரத்துத் தொழிலாளர்களின் 7 சங்கங்கள் பாாேட்டத்தில் இருந்துவிலகின. இவை அதிமுக, த.மா.கா. ஆதரவு சங்கங்கள்.
இதைத் தொடர்ந்து நடந்த பந்த்தின்போது இந்தத் தொழிலாளர்கள் பஸ்களை இயக்கினர். இதனால் கடந்த 15வாரங்களாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்த பஸ் போக்குவரத்து பந்த் நாளன்று கொஞ்சம் சரியானது. இது பந்த்நடத்திய தொழிலாளர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய அடியாகும்.
சென்னையில் பந்த் நாளான நேற்று 1,562 பஸ்கள் இயக்கப்பட்டன. கடந்த இரு வாரங்களாக 1,200 பஸ்கள்மட்டுமே இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் ஆட்டோ சங்கத்தினர் பலரும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால்ஆட்டோக்கள் ஓடின. கடைகள் வழக்கம்போல் திறந்திருந்தன.
மினி பஸ்கள் ஓடவில்லை:
ஆனால், தமிழகம் முழுவதும் தனியாருக்கு சொந்தமான பல மினி பஸ்கள் நேற்று ஓடவில்லை. பந்த்தை முன்வைத்து சமூக விரோதிகள் கல்வீச்சு போன்ற செயல்களில் ஈடுபடலாம் என்று அஞ்சிய மினி பஸ் உரிமையாளர்கள்இந்த பஸ்களை இயக்கவில்லை.
சென்னை தவிர தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளும் திறந்திருந்தன. ஆனால்,சென்னையில் சில ஆரம்பப் பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வுகளும்ஒத்தி வைக்கப்பட்டன.
பந்த் வெற்றி... தொழிலாளர்கள்:
ஆனால், பந்த்துக்கு பெரும் ஆதரவு இருந்ததாக பஸ் தொழிலாளர் போராட்டக் குழு அறிவித்துள்ளது.
இந்தக் குழு வெளியிட்ட அறிக்கையில், இந்த பந்த்தை முறியடிக்க அரசும் சில தொழிற் சங்கத்தினரும் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.எனவே,அரது தனது தவறான போக்கைக் கைவிட்டு உடனடியாக பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்.
கடலூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் தனியார், அரசுப் பேருந்துகள் முழுமையாக இயங்கவில்லை. சென்னையில் பல தொழிற்சாலைகள்இயங்கவில்லை.
மதுரையில் பல பேராசிரியர்கள் வேலைக்குச் செல்லவில்லை. இதனால் கல்லூரிகள் சில மூடப்பட்டன. கோவையில் ஜவுளித் தொழிலாளர்கள் வேலைக்குச்செல்லவில்லை. நெல்லை, குமரி மாவட்டங்களில் பந்துக்கு முழு ஆதரவு இருந்தது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
மக்களுக்கு நன்றி: பன்னீர்
ஆனால், இதை அரசு மறுத்துள்ளது. இது குறித்து முதல்வர் பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் இந்த பந்துக்கு ஆதரவே இல்லை. ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. 80 சதவீத பஸ்கள் ஓடின. அனைத்து அலுவலகங்களும் இயங்கின. இதற்காகஅரசின் சார்பில் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
பஸ் தொழிலாளர்களை விடுதலை:
ஸ்டிரைக் காரணமாக கைது செய்யப்பட்டுள்ள பஸ் தொழிலாளர்கள் இன்று முதல் விடுவிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசுஅறிவித்துள்ளது.
ஸ்டிரைக் காரணாகவும், பஸ்களைத் தடுத்து நிறுத்தியது உள்பட பல காரணங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ள பஸ் தொழிலாளர்களைவிடுவிக்க அரசு முடிவு செய்துள்ளது. அரசுடன் உடன்பாடு செய்து கொண்டுள்ள 7 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை முதலில்விடுதலை செய்ய அரசு முடிவு செய்தது.
இவர்கள் சனிக்கிழமை முதல் விடுதலை செய்யப்படுவார்கள்.
அதே சமயம் பஸ்களைத் தாக்கியது, பஸ்ஸை ஓட்டியவர்களை தடுத்து நிறுத்தியது போன்ற குற்றப் பிரிவுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்றும் அரசு அறிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications