சென்னை வணிக வரி அலுவலகத்தில் தீ: சதி செயலா?
சென்னை:
சென்னை பாரிமுனையில் உள்ள வணிகவரி அலுவலகக் கட்டடத்தில் இன்று காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.இதில், ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாயின.
தீயில் பல முக்கிய ஆவணங்கள் எரிந்து போய் இருக்கலாம் என்று கருதப்படுவதால், இது சதி செயலாக இருக்கலாம்என சந்தேகிக்கப்படுகிறது.
சென்னை பாரிமுனையில் உள்ள வணிக வரி அலுவலகம் அமைந்துள்ள கட்டடத்தின் 5வது மாடியில் இன்று(சனிக்கிழமை) காலை 7.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதை அருகில் உள்ள பஸ் ஸ்டாண்டில் காவலில்ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து, தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்த உடன் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததீயணைப்புத்துறையினர் கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும் ஐந்தாவது மாடியில் பற்றிய தீ, மளமளவெனப் பிடித்து ஆறாவது மாடிக்கும் பரவியது. இதில்ஐந்தாவது மாடியில் தான் வரி குறித்து சோதனை செய்யப்பட்ட ரெக்கார்டுகளின் விவரம் உள்ளது.
மேலும், வரிகளைக் குறைக்கக் கோரி வரும் அப்பீல்கள், அதன் மீதான விசாரணைகள் அடங்கிய ஆவணங்களும்இருந்தன.
இதுகுறித்து வனிக வரித்துறை சிறப்பு ஆணையர் அருண்ராமன் கூறுகையில்,
இன்று ஏற்பட்ட தீ விபத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்ட வருமான வரி சோதனைகள் குறித்த முக்கியரெக்கார்டுகள் தீயில் கருகி உள்ளன.
இன்று விடுமுறை என்பதாலும், அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதாலும் அதிர்ஷ்டவசமாக உயிர்ப்பலி எதுவும்நடக்கவில்லை என்றார்.
காவல்துறை அதிகாரியான சைலேந்திர பாபு கூறுகையில், அலுவலகத்தில் இருந்த மேஜை, நாற்காலிகள் உட்படமொத்தம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசாமாகிவிட்டன என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications