இலங்கையிடம் பிடிபட்ட தமிழக மீனவர் நிலை என்ன?

Subscribe to Oneindia Tamil

நாகபட்டிணம்:

கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நாகபட்டிணம் மீனவர்கள்4 பேரை விடுவிக்கக் கோரி புகார் தரப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த 5ம் தேதி நாகபட்டிணம் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 4 மீனவர்கள், திடீரென காற்றும்மழையும் அடித்ததால் திசை மாறி இலங்கைக் கடற்பகுதிக்குள் சென்று விட்டனர். இவர்கள் அனைவரும்நாகபட்டிணம் வானவன் மகாதேவி மீனவக் குப்பத்தைச் சேர்ந்தவர்கள்.

கடலில் அந்தவழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர் அந்த 4 மீனவர்களையும்கைது செய்த இலங்கைக்குக் கொண்டு சென்றனர். இவர்கள் அனைவரும் தற்போது யாழ்ப்பாணம் சிறையில்அடைத்து வைக்ககப்பட்டுள்ளனர்.

கடலில் மீன்பிடிக்கப் போன இவர்களைப் பற்றித் தகவல் எதுவும் தெரியாததால், காவல் துறைக்கும், கடலோரக்காவல்படை அதிகாரிகளுக்கும் தகவல் தரப்பட்டது.

இந்நிலையில் இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்டவர்களிடம் இருந்து நாகபட்டிணத்திற்கு ஒரு கடிதம் வந்தது.அதில் தாங்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், அதிகாரிகளிடம் சொல்லி தங்களை மீட்கநடவடிக்கை எடுக்குமாறும் கூறியிருந்தார்கள்.

இதையடுத்து மீண்டும் அந்தக் கடிதத்துடன் சென்று போலீசாரிடமும், கடலோரக் காவல்படை அதிகாரிகளிடமும்நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

இதனால் அந்தப் பகுதி மீனவர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+