ஜெயலலிதாவுக்கு டி.ராமசந்திரன் பதில்
சென்னை:
சபாநாயகர் பதவியை ஏன் ராஜினாமா செய்யவில்லை என்பதற்கு பாண்டிச்சேரி சபாநாயகரும், வெள்ளிக்கிழமை அதிமுகவிலிருந்துநீக்கப்பட்டவருமான எம்.டி.ஆர். ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. அங்கு அதிமுக சார்பில் எம்.எல்.ஏவாகி சபாநாயகராகவும் ஆனவர் ராமச்சந்திரன்.பாண்டிச்சேரியில் காங்கிரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்ற ஜெயலலிதா ராமச்சந்திரனை பதவி விலகுமாறு உத்தரவிட்டார்.ஆனால், ராமச்சந்திரன் அந்த உத்தரவை தட்டிக் கழித்து வந்தார்.
இதையடுத்து அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே ஜெயலலிதா நீக்கினார்.
இது குறித்து பாண்டிச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய ராமச்சந்திரன், தற்போது பாண்டிச்சேரி சட்டசபையில் துணை சபாநாயகர்பதவி காலியாக உள்ளது. சபாநாயகர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றால் ராஜினாமா கடிதத்தை துணைசபாநாயகரிடம்தான் கொடுக்க வேண்டும்.
அவர் இல்லாத காரணத்தால் துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டவுடன் ராஜினாமா செய்கிறேன் என்று அதிமுக மேலிடத்திற்குவிளக்கமாக கடிதம் அனுப்பியிருந்தேன்.
ஆனால், அந்தக் கடிதத்தை பரிசீலிக்காமலேயே என்னைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்கள். இதற்காக நான் வருத்தப்படவில்லை.உண்மையைப் புரிந்து கொள்ள அவர்கள் மறுக்கிறார்கள் என்ற வருத்தம் மட்டுமே எனக்கு உள்ளது என்றார் அவர்.
இதற்கிடையே, விரைவில் காங்கிரஸ் கட்சியில் ராமச்சந்திரன் சேருவார் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான பூர்வாங்க வேலைகளைமாநில காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி செய்து முடித்து விட்டார் என்று கூறப்படுகிறது.
துவக்கத்தில் திமுகவில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர் ராமச்சந்திரன். திமுக சார்பில் முதல்வராகவும் இருந்துள்ளார். திமுக தலைமையுடன்ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து விலகி அதிமுகவில் இருந்து வந்தார்.
தற்போது காங்கிரசில் தன்னை இணைத்துக் கொள்ளவுள்ளார் ராமச்சந்திரன். ராமச்சந்திரன் வருகையை காங்கிரஸ் கட்சியில் உள்ள முன்னாள்முதல்வர்களான வைத்திலிங்கம், சண்முகம் போன்றவர்கள் எப்படி வரவேற்பார்கள் என்று தெரியவில்லை.
ஆனால் அவரை கட்சிக்குள் கொண்டு வருவதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு மாநிலத்தில் பெரிய அளவில் எதிரிகளே இல்லாமல் செய்துவிடலாம் என்ற கணக்கில் காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி இருப்பதால் ராமச்சந்திரனை கட்சியில் சேர்ப்பதில் எந்தப் பிரச்சினையும்இருக்காது என்று கூறப்படுகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications